24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
21 6144946
அழகு குறிப்புகள்

கணவருடன் சொகுசு வாழ்க்கை!சிக்கிய டிக் டாக் தம்பதி!

தமிழகத்தில் வெள்நாட்டில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இடம் வாங்கித்தருவதாக கூறி, டிக்டாக் தம்பதி பல லட்சம் ரூபயை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் டிக் டாக் மாமி என்று அழைக்கப்படுபவர் காயத்ரி. இவர் கோகவரம் பாஜக கட்சி தலைவராக உள்ளார். இவர் தன்னுடைய கணவரான ஸ்ரீதருடன் இணைந்து செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவார்.

இவர்களின் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இந்நிலையில், இந்த டிக் டாக் பிரபல ஜோடி அந்த பிரபலத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

அதாவது சமூகவலைத்தளத்தில் இவர்களின் வீடியோ மற்றும் அவர்கள் இருக்கும் கெட்டப்பைக் கண்டு, இவர்கள் ஏதோ பெரிய இடத்து ஆள் என்று நினைத்து, தமிழகத்தின் ஏலூரை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் தனது மகளை வெளிநாட்டு மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க உதவ வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது இந்த தம்பதி, தங்களுக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் பழக்கம் இருப்பதாக கூறியும், நிச்சயம் இடம் வாங்கித்தருவதாக கூறியும், பல லட்சம் ரூபாய்களை கொஞ்சம், கொஞ்சமாக வாங்கியுள்ளனர்.

அதன் படி தற்போது 44 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ள இந்த தம்பதி, இதுவரை மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கித் தரவில்லை.

இதே போன்று இந்த தம்பதி, தங்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரிசி ஆலை தொடங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று தருவதாக 4 பேரிடம் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும், மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத் தருவதாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பல லட்சங்களை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இப்படி பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டம் காட்டிய இந்த டிக்டாக் தம்பதி மீது பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் அளித்ததால், பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பொலிசார் இது போன்று டிக் டாக்கில் யாரையும் நம்பி தங்கள் சொந்த பிரச்சனைகளையோ அல்லது வேறு எதையுமோ நம்பி முடிவெடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

அகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க!….

sangika

கைகள் பராமரிப்பு

nathan

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி,

nathan

பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா? இதோ சில வழிகள்!

nathan

இதை முயன்று பாருங்கள் வீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா?

nathan

இவ்வாறு கருப்பாக உள்ள கழுத்து பகுதியில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan