27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
deats02
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்து விடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை, கால் பகுதி கருமையடைந்து விடுகிறது.

deats02இதற்கு என்னதான் ரசாயனங்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்தினாலும் அவை தாற்காலிகமாக மட்டுமே மாற்றத்தைத் தருகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மேற்கொள்ளும் பராமரிப்பு தான் நிரந்தரத் தீர்வைத் தரும்.

தேவையான பொருட்கள்

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 5
உலர்ந்த திராட்சை பழம் – 13
பப்பாளி பழக்கூழ் – அரை டீஸ்பூன்

இவை இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்கு மை போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பின்பு இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டு, 30 நிமிடங்கள் கழித்து, முகத்தை கழுவி விடுங்கள். இந்த பேஸ் பேக்கை வாரம் 3 முறை போட்டு வரலாம். இந்த பேஸ்பேக்கை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சருமம் பொலிவடைவதை காணலாம்.

Related posts

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

nathan

உங்கள் சருமத்திற்கு பொலிவு தரும் 3 சிறந்த மண் வகை மாஸ்க்குகள்

nathan

உங்களுக்கு நெற்றியில் இப்படி பருக்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

அற்புதமான குறைபாடற்ற தோலுக்கான 10 எளிய குறிப்புகள்

nathan

சுவையான மட்டன் கீமா சாக்

nathan

கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?

nathan