23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
money 1638950249
அழகு குறிப்புகள்

இந்த 6 இடத்துல மச்சம் இருக்குறவங்களுக்கு பணக் கஷ்டமே வராதாம்… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

மச்சங்களானது தோலில் சிறிய கருப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த மச்சங்கள் ஒருவரின் அடையாள குறிகளாகவும், வாழ்க்கையில் ஒருவரின் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். அதுவும் உடலின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மச்சங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஆண்களுக்கு வலது பக்கத்தில் இருக்கும் மச்சம் அதிர்ஷ்டமானதாகவும், பெண்களுக்கு இடது பக்கத்தில் இருக்கும் மச்சம் அதிர்ஷ்டமானதாகவும் கருதப்படுகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு மச்சத்திற்கும் சில சிறப்பு விஷயங்கள் உள்ளன. இந்து நம்பிக்கைகளின் படி, உடலில் உள்ள மச்சம் ஒருவரின் நிதி நிலையைக் மட்டுமின்றி, குணாதிசயங்களையும் கூறுகிறது. குறிப்பாக மனித உடலின் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மச்சம் செல்வத்திற்கும், பணத்திற்கும் பஞ்சம் இரக்காது என்பதைக் குறிக்கிறது. இப்போது அந்த மச்சங்கள் எவையென்பதைக் காண்போம்.

புருவங்களுக்கு இடையில் மச்சம்

புருவங்களுக்கு இடையே உள்ள வெற்று இடத்தில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் இப்பகுதியில் உள்ள மச்சம் நிதி நிலைமையைக் குறிப்பது மட்டுமின்றி, இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும் மற்றும் இவர்களது வீடு செல்வத்தால் நிறைந்திருக்கும்.

முதுகு

முதுகுப்பகுதியில் மச்சம் இருப்பதும் ஒருவரின் சிறப்பான செல்வ வளத்தைக் குறிக்கிறது. இது தவிர, முதுகில் மச்சம் கொண்டவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் காதலன்/காதலிக்க நிறைய செலவுகளை செய்வார்கள். மேலும் இத்தகைவர்கள் எவ்வளவு வேகமாக பணத்தை சம்பாதிக்கிறாரோ, அவ்வளவு வேகமாக பணத்தை செலவழிப்பார்கள்.

தொப்புள் அருகே மச்சம்

பொதுவாக வயிற்றில் மச்சம் இருப்பது கெட்டதாக கருதப்பட்டாலும், அதே மச்சம் ஒருவரது தொப்புளைச் சுற்றி இருந்தால், அது அதிர்ஷ்டமானதாகும். அதுவும் ஒருவருக்கு தொப்புளைச் சுற்றி மச்சம் இருந்தால், அந்த நபர் எப்போதும் செல்வ செழிப்போடு இருப்பார். மேலும் வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டசாலியாவே இருப்பார். இத்தகையவர்களுக்கு பணப் பிரச்சனையே வராது.

கால் விரலில் மச்சம்

காலில் மச்சம் இருப்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, காலில் மச்சம் இருப்பவர்கள் ஒரு இடத்தில் இருக்கமாட்டார்கள் மற்றும் இவர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வார்கள். ஆனால் இந்த மச்சம் கால் விரலில் இருந்தால், அது அந்நபர் சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக தனது அடையாளத்தை உருவாக்குவார் மற்றும் செழிப்போடும் இருப்பார். முக்கியமாக இத்தகையவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், தாராள மனதுடன் அனைவருக்கும் உதவுபவர்களாக இருப்பார்கள்.

வலது தோள்பட்டை

வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால், அது நல்ல அறிகுறியாகும். ஏனெனில் இந்த இடத்தில் இருக்கும் மச்சம், நீங்கள் நிதியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருப்பதைக் குறிக்கிறது. இம்மாதிரியான குணாதிசயம் வாழ்வில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது உறுதி.

வலது உள்ளங்கை

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பது, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் செல்வத்தையும், வெற்றியையும் தரும். மேலும் இந்த இடத்தில் உள்ள மச்சம் உங்களின் அமைதியான நடத்தை மற்றும் தொலைநோக்கு பார்வையையும் குறிக்கிறது.

Related posts

இதை ட்ரை பண்ணுங்க.முகத்தில் எண்ணெய் வழியுதா? இதோ எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகள்.

nathan

தோல் பளபளப்பாக!

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

விஜய் நடித்த பிகில் பட நடிகையின் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!

nathan

இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

nathan

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

முகத்துக்கு அழகு புருவம்

nathan

அடேங்கப்பா! பாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி..

nathan

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

sangika