25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
சைவம்

காளான் டிக்கா

என்னென்ன தேவை?

குடை மிளகாய் சதுரமாக வெட்டியது – 6 துண்டுகள்,
பெரிய வெங்காயம் வட்டமாக நறுக்கியது – 4 துண்டுகள்,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
காளான் – 3,
நீளமான டிக்கா ஸ்டிக் – 1, (பச்சை மிளகாய் – 2, பூண்டு – 6) விழுதாக அரைக்கவும்.

வறுத்துப் பொடிக்க…

சோம்பு – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
தனியா – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

வெங்காயத் துண்டுகளில் உப்பு, மிளகுத்தூள் போட்டு பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, மிளகாய் விழுதை போட்டு, உப்பு சேர்த்து சிறிது மிளகுத்தூள் போட்டு வதக்கி, அதில் வறுத்த பொடி போட்டு கிளறி, அதில் குடை மிளகாய், காளான் போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் வறுத்து எடுத்து ஸ்டிக்கில் குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாறி மாறி செருகி பரிமாறவும்.

sl3910

Related posts

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

புதினா சாதம்

nathan

சத்தான பாலக் தயிர் பச்சடி

nathan

பேபிகார்ன் கிரிஸ்பி ஃப்ரை

nathan

மாங்காய் சாதம்

nathan

கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan