24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
201610211003576799 mutton kudal gravy Aatu Kodal Vathakkal mutton kudal kulambu SECVPF
அசைவ வகைகள்ஆரோக்கிய உணவு

சுவையான மட்டன் குடல் குழம்பு

சூடான இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பரான மட்டன் குடல் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மட்டன் குடல் குழம்பு
தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் – 750 கிராம்
வெங்காயம் – 4
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)

* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.

* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.

* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.201610211003576799 mutton kudal gravy Aatu Kodal Vathakkal mutton kudal kulambu SECVPF

Related posts

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

தினமும் ஃபிரஸ் ஜூஸ் குடித்தால் உயிருக்கே ஆபத்து! திடுக்கிடும் தகவல்!

nathan

சத்து பானம்

nathan

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி….!

nathan

இந்த அளவிற்கு மேல் உப்பு சாப்பிட்டால் இதயக்கோளாறு வருமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

nathan

சூப்பரான மிளகு முட்டை வறுவல்

nathan

தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!

nathan

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan