தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்
அரிசி – 1கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – ருசிக்கேற்ப
சோம்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை
மிளகாய் – 5
மிளகு – சிறிது
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய், மிளகு சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயம், தக்காளி பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
* அதில் உறவைத்து கழுவிய அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
* சுவையான பருப்பு சாதம் தயார்.