27.8 C
Chennai
Wednesday, Mar 11, 2026
60
அழகு குறிப்புகள்

சற்றுமுன் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..!

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட். இவர் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்க்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தின் மூலம் திரைபடத்துக்கு அறிமுகமானார்.

இவர் கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். வில்லியம் ஹர்ட் கடைசியாக நடித்த தி கிங்க்ஸ் டாட்டர் படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

இவர் 1985ல் வெளியான கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வில்லியம் ஹர்ட் ஆஸ்கார் விருது பெற்றார்.

சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வில்லியம் ஹர்ட் நேற்று மரணம் அடைந்தார்.

அவருக்கு 71 வயதான நிலையில் தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உயர் பிரிந்தது. வில்லியம் ஹர்ட் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.William Hurt– source: dailythanthi

Related posts

நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !2023ல் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !!

nathan

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan

தெரிந்து கொள்ளுங்கள்! சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதனு ஏன் பெரியவங்க சொல்றாங்க தெரியுமா?

nathan

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!…

nathan

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

தொடையில் உள்ள கருமையைப் போக்க ,beauty tips in tamil

nathan