தேவையான பொருள்கள்:
காளான் – கால் கிலோ
தேங்காய் – 1 கப்
தக்காளி – 4
வெங்காயம் – 2
மிளகு – 20 கிராம்
ஏலக்காய் – 6
பூண்டு – 12 பல்
கிராம்பு – தேவையான அளவு
பட்டை – தேவையான அளவு
மிளகாய் பொடி- 4 தேக்கரண்டி
கடுகு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காளானை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகு, ஏலக்காய், பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.
* தேங்காயை அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் காளானை போட்டு வதக்கி பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.
* பிறகு அரைத்து வைத்திருந்த மசாலாவை போட்டு வதக்கவும்.
* மசாலா வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி தேங்காய் பாலை விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
* சுவையான மற்றும் ஆரோக்கியமான மஷ்ரூம் குழம்பு தயார்.
* இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், நூடுல்ஸ், பிரட் போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.