தேவையான பொருட்கள் :
காலிப்ளவர் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
எண்ணெய்
செய்முறை :
• காலிப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். பின்னர் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
• இப்போது காலிப்ளவர் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
• உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு வேக விடவும்.
• காலிப்ளவர் மென்மையாக வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி விடவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
• ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்