24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 1421752199 paal paniyaram
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு பால் பணியாரம்

பச்சரிசி – 1/2 கப்,
உளுத்தம் பருப்பு – 1/2 கப்,
தேங்காய் பால் – 1 கப்,
காய்ச்சிய பால் – 1/4 கப்,
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை,
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
20 1421752199 paal paniyaram
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதில் பொரித்து வைத்துள்ளதை சேர்த்து 5-10 நிமிடம் ஊற வைத்து பின் பரிமாறினால், சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!

Related posts

சூப்பரான செட்டிநாடு தக்காளி குழம்பு

nathan

சுவையான காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

nathan

சுவையான செட்டிநாடு பூண்டு ரசம்

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி

nathan

செட்டிநாடு இறால் சுக்கா

nathan

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

nathan

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan