29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
dryskin
முகப் பராமரிப்பு

க பனியால் சருமம் ரொம்ப வறண்டு போகுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை தான் சரும வறட்சி. அதுவும் பனி அதிகமாக பொழியும் போது, சருமம் இருமடங்கு வறட்சி அடைகிறது. எனவே தான் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பலர் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க விரும்புவார்கள். ஏனெனில் கெமிக்கல் நிறைந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பை கொடுத்து வந்தால், சரும செல்கள் சேதமடைந்து விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வைத்துவிடும் என்பதால் தான்.

ஆகவே நீங்கள் உங்கள் சரும வறட்சியைத் தடுக்க ஒரு நல்ல நேச்சுரல் மாய்ஸ்சுரைசரைத் தேடுகிறீர்கள் என்றால், பின்வரும் ஃபேஸ்பேக்குகளை போட்டு வாருங்கள். இந்த ஃபேஸ் பேக்குகளை தினமும் இரவு நேரத்தில் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து விடுபடலாம். அதோடு சரும செல்கள் ஆரோக்கியமாகி, சருமமும் நன்கு பொலிவோடு வறட்சியின்றி அழகாக காட்சியளிக்கும்.

தேன் மற்றும் முட்டை மஞ்சள் கரு

ஒரு பௌலில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் சருமம் அதிகம் வறட்சி அடையும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முட்டை மஞ்சள் கரு, தேன் மற்றும் தயிர்

எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் முகப்பரு அதிகம் வருபவர்கள், ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் சிறித முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வறட்சியான சருமத்தில் தடவி 20 நிமிம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

கனிந்த பப்பாளி

நன்கு கனிந்த பப்பாளி பழத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதிகம் வறட்டு போகும் சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பப்பாளியில் கிளின்சிங் பண்புகள் உள்ளதால், இதை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குதோடு, சருமம் வறட்சியின்றி பொலிவோடு மினுக்கும்.

கேரட்

கேரட்டை துருவி, அதை சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அதில் உள்ள வைட்டமின் ஏ, குளிர்கால சரும பிரச்சனைகளைப் போக்கும்.

அவகேடோ

நன்கு கனிந்த அவகேடோ பழத்தின் கூழ் பகுதியை ஒரு பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தேன்

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.

கோதுமை தவிடு மாஸ்க்

ஒரு பௌலில் 3 டீஸ்பூன் கோதுமை தவிடை எடுத்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் பாதாம் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

Related posts

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க…

nathan

சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

nathan

அரிசி மாவை இப்படி பயன்படுத்துவதால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

கரும்புள்ளிகள் நீக்குவதற்கு எளிய DIY முட்டை முகமூடி

nathan

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan