20 1448019447 lamb chops
அசைவ வகைகள்

காரமான மற்றும் மொறுமொறுப்பான… மட்டன் சாப்ஸ்

வெள்ளிக்கிழமை வந்தாலே, பலருக்கும் குஷியாக இருக்கும். இந்த விடுமுறையில் வித்தியாசமாக நாம் என்ன செய்து சாப்பிடலாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த வகையில் இந்த வார விடுமுறையில் நன்கு காரமாகவும், மொறுமொறுப்புடனும் இருக்கும் மட்டன் சாப்ஸ் செய்து சுவையுங்கள்.

இங்கு அந்த மட்டன் சாப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் – 7 பெரிய துண்டுகள்
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நீர் ஊற்றி நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மட்டன் மற்றும் எண்ணெயைத் தவிர, இதர பொருட்களைப் போட்டு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு அகன்ற தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, மட்டன் துண்டுகளைப் போட்டு தீயைக் குறைத்து 15 நிமிடம் வேக வைத்து, மட்டனை திருப்பிப் போட்டு 12 நிமிடம் வேக வைத்து, பின் தீயை அதிகரித்து 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், மொறுமொறுப்பான மட்டன் சாப்ஸ் ரெடி!!20 1448019447 lamb chops

Related posts

சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

சோயா இறைச்சி பொரியல்

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

கறிவேப்பிலை மீன் வறுவல் – இந்த வார ஸ்பெஷல்!

nathan

காரைக்குடி மீன் குழம்பு

nathan