25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
weight loss
மருத்துவ குறிப்பு

ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க ஆசையா?அற்புதமான எளிய தீர்வு

உடல் எடையை குறைக்க பல வழிகள் வந்துவிட்டன. இருப்பினும் அவற்றில் சிறந்த வழி என்னவென்று தெரியாமல் பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், காலை வேளையில் பின்பற்ற வேண்டிய சில செயல்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையானது ஆரோக்கியமான வழியில் குறையும்.

தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

உடல் எடை அதிகம் இருப்போர், காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் தங்கியுள்ள நச்சுக்களுடன், கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடை குறைவதுடன், உடலின் எனர்ஜி அதிகரிக்கும். மேலும் செரிமான பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

1/2 லிட்டர் தண்ணீர்

தினமும் காலையில் பல் துலக்கியதும், 1/2 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களானது வெளியேறிவிடும். இப்படி தொடர்ந்து செய்து வர, உடல் எடையில் மாற்றம் தெரியும்.

உடற்பயிற்சி

காலையில் எடையை குறைக்க செய்ய வேண்டியவைகளில் ஒன்று தான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி என்றதும் ஜிம் அல்லது கார்டியோ போன்றவற்றை தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நடனம், ஏரோபிக்ஸ் அல்லது யோகா போன்றவற்றில் எவையேனும் ஒன்றை செய்து வந்தாலும், உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, எடை குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, காலையில் இவற்றை மேற்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

காலை உணவை உண்ணவும்

ஒரு நாளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. உடல் எடையை குறைக்க ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால் காலையில் அவசியம் சாப்பிட வேண்டும். அதிலும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை காலை வேளையில் நன்கு வயிறு நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.

தியானம்

காலையில் எழுந்ததும், தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்து வந்தால், மனம் அமைதியடைவதுடன், உடலும் ரிலாக்ஸாக இருக்கும். இப்படி மனம் ரிலாக்ஸாக இருந்தால், உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். எனவே தினமும் காலையில் கொஞ்ச நேரமாவது தியானம் செய்யுங்கள்.

Related posts

பெண்ணுறுப்பில் மட்டும் அடிக்கடி ஏன் அரிப்பு ஏற்படுகிறது? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தமிழர்களின் ஆயுர்வேதத்தின் படி பழங்களை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதாம்…

nathan

“எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது’

nathan

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி. விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ….இருந்த தடமே தெரியாதாம்

nathan

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறுநீர் கோளாறுகளில் இருந்தும் விடுபட ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து!

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan