25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
02 1462171911 10 men skin care
ஆண்களுக்குசரும பராமரிப்பு

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!தெரிந்துகொள்வோமா?

ஆண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். அவர்கள் தங்களது தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் ஒருசில எளிய பழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும்.

இங்கு ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையில்லாத முடி

ஆண்களுக்கு தாடி தான் அழகு என்பதோடு, பல பெண்களும் அதையே விரும்புகின்றனர். அதற்காக தேவதாஸ் போன்று தாடி வைத்துக் கொள்வது மோசமான தோற்றத்தைத் தரும். எனவே ஷேவிங் செய்யாமல், ட்ரிம் செய்யுங்கள். அதிலும் உங்கள் முகத்திற்கு பொருத்தமான ஸ்டைலைப் பின்பற்றுங்கள். இதனால் உங்கள் ஸ்டைல் மேன்மேலும் அதிகரித்து காணப்படும்.

வாய் சுகாதாரம்

தினமும் தவறாமல் இருவேளை பற்களைத் துலக்குங்கள். மேலும் நாக்கை தினமும் சுத்தம் செய்யுங்கள். இதனால் வாய் ஆரோக்கியம் மேம்பட்டு, வாய் துர்நாற்றம் தடுக்கப்படுவதோடு, பற்களும் நன்கு பளிச்சென்று இருக்கும்.

நீர்

முக்கியமாக தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதனால் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.

நல்ல நிலை

எப்போதும் உட்காரும் போது, நடக்கும் போது, நிற்கும் போது என அனைத்து நேரங்களிலும் சரியான நிலையில் இருங்கள். குறிப்பாக கூன் போட்டு உட்கார்வதைத் தவிர்த்து, நேராகவும், தைரியமானவராகவும், தன்னம்பிக்கை மிக்கவராகவும் இருங்கள். இதனால் பெண்கள் உங்கள் வலையில் தானாக வந்து விழுவார்கள்.

பொருத்தமான உடை

ஆண்கள் மிகவும் தளர்வான, தனக்கு பொருத்தமில்லாத உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக தனக்கு பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தாலே போதும், அதுவே அவர்களது கவர்ச்சியை அதிகரித்து மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

சரும பராமரிப்பு

ஆண்கள் தினமும் சோப்பு போட்டு மட்டும் முகத்தைக் கழுவும் பழக்கத்தை விட்டு, கிளின்சிங், ஸ்கரப்பிங், மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை வெளியேறி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

உதடு பராமரிப்பு

கோடையில் நீர்ச்சத்து உடலில் குறையும் போது உதடுகளில் அதிகமாக வறட்சி ஏற்படும். இப்படி உதட்டை நீர்ச்சத்தின்றி வறட்சியுடன் வைத்துக் கொண்டால், அதுவே உங்கள் அழகை பாதிக்கும். எனவே பெண்கள் பயன்படுத்துவதைப் போல் ஏதேனும் லிப் பாம் அல்லது லிப் மாய்ஸ்சுரைசர் தடவலாம். இதில் எந்த ஒரு தவறும் இல்லை.

முடி பராமரிப்பு

முக்கியமாக ஆண்களின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் அவர்களது ஹேர் ஸ்டைலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கேவலமான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றுவதைத் தவிர்த்து, உங்களுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைல் என்னவென்று தெரிந்து அவற்றைப் பின்பற்றுங்கள்.

உடற்பயிற்சி

சிக்ஸ் பேக் வைத்தால் தான் அழகு என்பதில்லை. தினமும் தொப்பையின்றி உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலே போதும்.

சன் ஸ்க்ரீன்

ஆண்கள் வெளியே அதிகம் சுற்றுபவர்கள். பெண்களைப் போல் வெயில் என்று வீட்டிலேயே அடைந்து இருப்பவர்கள் அல்ல. எனவே வெளியே வெயிலில் சுற்றச் செல்லும் முன், சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் சன் ஸ்க்ரீன் லோசனைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

02 1462171911 10 men skin care

Related posts

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan

மேக்கப் போடுவதில் மட்டுமல்ல கலைப்பதிலும் கவனம் அவசியம்

nathan

இவைகள் இளமையிலேயே சருமத்தை சுருங்கச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

அக்குள் கருப்பா இருக்கா? அதைப் போக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

அதிரடி அழகுக் குறிப்புக்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா சருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை

nathan

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

sangika

காது அழகை பராமரிப்பது எப்படி?

nathan