அந்தரங்க பகுதி கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அந்தரங்க பகுதி என்று கூறும் தொடையின் உள் பகுதியும் அடங்கும்.
இப்படி கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு பல்வேறு க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டும் எளிதில் சரும கருமையைப் போக்கலாம்.
அதில் 3 பொருட்களை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி நல்ல பலன்களை பெற்று கொள்ளுங்கள்.
கடலை மாவு
கடலை மாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை கருப்பான அந்தரங்க பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வெட்டி, கருமையான அந்தரங்க பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்தால், உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், கருமையான பகுதியை வெள்ளையாக்க உதவும்.
தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும்.
அதோடு, இது அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தணிக்கவும் உதவும்.
அதற்கு தயிரை தினமும் கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.