26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
esezodiacsignsaremostlikelytocheat
அழகு குறிப்புகள்

இந்த ராசிகள் அநேகமாக உங்களை ஏமாற்றலாம்!தெரிந்துகொள்வோமா?

தங்கள் துணையிடம் அநேகமாக பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்க்கும் பண்பானது உண்மை. சிலர் தங்களது உறவில் உண்மையாக இருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் கணவன் அல்லது மனைவி அல்லது இருவருமே கள்ள உறவை வைத்திருக்கலாம். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லாமல் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவே.

 

முற்காலத்தில் நம் துணையால் நாம் ஏமாற்றப்பட்டால், அது மீண்டும் நடக்காமல் தடுக்க முயற்சி செய்வது முக்கியமாக கருதப்படும். இதனை மனதில் வைத்துக் கொண்டு, உண்மை என வந்து விட்டால் எந்த ராசிக்காரர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாமா? இதை பார்க்கும் போது யார் அதிகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதையும் பார்க்க தானே வேண்டும்.

 

12 ராசிக்காரர்களுக்கான பொதுவான வழிமுறைகளைப் பற்றி தான் நாம் பேசப் போகிறோம். ஆனால் இவை விளக்கமானவை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதல் அல்லது பொருத்தத்தைப் பற்றி, ஜோதிடம் குறித்து நல்ல ஞானத்தை கொண்டவரிடம் சென்று துல்லியமான அறிவுரையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மேஷம்: அந்தளவிற்கு நம்ப முடியாது

சார்பில்லாமல் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களான இவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவுகளை முழுமையாக கருதுவதற்கு முன்னதாகவே செயல்பட தொடங்கி விடுவார்கள். துணிகரமான செயல்களின் மீது தீராத பசியை கொண்டவர்கள் இவர்கள். அதனால் பல காதலர்களையும் பல உறவுகளையும் கொண்டிருப்பவர்கள் இவர்கள். உங்கள் துணையானவர் மேஷ ராசிக்காரர் என்றால், நீங்கள் திடமாக, செயல்களுக்கு தயாராக, ஆச்சரியங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டும். தொடர்ச்சியான காலத்திற்கு ஒரே அமைவுமுறையில் ஒட்டி கொண்டு வாழ்வதை அவர்கள் வெறுப்பார்கள். அதனால் உங்களது மேஷ ராசி துணை உங்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால், காலத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வாருங்கள். அவர்கள் வேகத்திற்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாமல் போகும் போது தான் அவர்கள் உங்களை ஏமாற்றுவார்கள்.

ரிஷபம்: முழுமையான நேர்மை

உங்கள் துணை ரிஷப ராசிக்காரர் என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தான் அனைத்து ராசிக்காரர்கள் மத்தியில் மிகவும் நேர்மையானவர்கள். நிலைத்தன்மையை நம்பும் ரிஷப ராசிக்காரர்களை தீவிரமாக சார்ந்திருக்கலாம், நம்பலாம். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இவர்கள். திருமணம் அல்லது அது சார்ந்த உறவு தடைகளும் இதில் அடக்கம். சில ரிஷப ராசிக்காரர்களால் தங்கள் உறவை கைவிட கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் தாங்கள் விரும்புபவர்கள் தங்களையும் அதே போல் காதலிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு வேளை நீங்கள் அவர்கள் மீது சந்தேகப்பட்டால் அவர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது.

மிதுனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது

இந்த இரட்டையர் ராசிக்காரர்கள் துணிச்சல் மிக்கவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள். உற்சாகத்துடன் இருப்பதை நம்பும் இவர்கள் சில நேரங்களில் ஆபத்தானவர்களாகவும் திகழ்வார்கள். குறும்புக்காரர்களான இவர்கள் விளையாட்டு விளையாடுவதை விரும்புவார்கள்; மனதோடு விளையாடும் விளையாட்டையும் சேர்த்து. மிதுன ராசிக்காரருடன் நீங்கள் டேட்டிங் செய்தால், இரட்டையர் ராசிக்காரரான அவர் ஏழரையை இழுத்து விடுவார். ஒரு துணைக்கு மேலானவர்களை மாற்றிக் கொள்ளும் திறனை படைத்தவர்கள் இவர்கள். மேலும், உறுதியில்லாதவர்கள் இவர்கள். அதனால் ஒரு காதலை வந்த வேகத்தில் கழற்றி விடக்கூடியவர்கள். நீங்கள் அமைதியானவரா, நெகிழ்வு தன்மை இல்லாதவரா, அல்லது குறை கூறுபவரா? அப்படியானால் உங்களை ஒரு மிதுன ராசிக்காரர் விரும்புவது பெரிய அதிசயம் தான். உடல் ரீதியான அல்லது மன ரீதியான அல்லது உணர்ச்சி ரீதியான நிலையான தூண்டுதலே அவர்களுக்கு தேவையானது.

கடகம் : முழுமையான நேர்மை

இந்த ராசிக்காரர்கள் ஏறுமாறான, பாதுகாப்பின்மை அற்ற, குடும்ப பற்று சார்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டையும், குடும்பத்தையும் தான் பெரிதும் விரும்புவார்கள். ஆழமான உணர்ச்சி ரீதியான பந்தம் இல்லாதவரை அவர்கள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். உறவில் இருக்கும் போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வை தான் அவர்கள் பெரிதும் நம்புவார்கள். அதனால் தங்களின் துணையை உடனடியாக தன் குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுவார்கள். உணர்ச்சி ரீதியான வலியால் அவர்கள் மூழ்கும் உணர்வை பெற்றாலே ஒழிய, கடக ராசிக்காரர்கள் தங்களின் உறவை அவ்வளவு சுலபத்தில் உடைக்க மாட்டார்கள். தங்களுக்கும் தங்களின் துணைக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்கவே அவர்கள் முற்படுவார்கள். உங்கள் நம்பிக்கையை ஒரு போதும் அவர்கள் பாழாக்க மாட்டார்கள்.

சிம்மம்: அந்தளவிற்கு நம்ப முடியாது

காட்டின் ராஜாவான இவர்கள் பல்வேறு காதலர்கள் மற்றும் உறவுகளை கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். சிம்மம் என்பது கச்சிதமான ராசிக்காரர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சரியான துணைக்காக எதிர்ப்பார்ப்பவர்கள் இவர்கள். துரதிஷ்டவசமாக சில உறவுகள் கச்சிதமாக அமையும். ஆனால் அந்த உறவு தனக்கு ஒத்து வராது என சிம்மராசிக்காரர் நினைத்து விட்டால், வளமுள்ள நிலத்திற்கு அவர் எளிதில் தாவி விடுவார். இவர்களின் நம்பிக்கைக்கு விலையுண்டு – இவர்களுடனான உறவில் நீங்கள் நீடிக்க வேண்டுமானால் இவர்களின் பெருமையை நீங்கள் அடிக்கடி பாராட்டியாக வேண்டும். சுலபமாய் நாடகத்தை நடத்துபவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். அதனால் உங்கள் காதலை அவர்களிடம் நிரூபிக்க நீங்கள் என்ன தான் ஒற்றை காலில் நின்றாலும், லேசில் மசிய மாட்டார்கள் இவர்கள்.

கன்னி: அந்தளவிற்கு நம்ப முடியாது

கன்னி ராசியின் பெயரை வைத்து அவர்களை நம்பி விடாதீர்கள். அதற்கு காரணம் கன்னி ராசிக்காரர்கள் என்பவர்கள் துறவிகளை தவிர மற்ற அனைத்தும் ஆவார்கள். நேர்மையையும் உண்மையான நெருக்கத்தையும், எதையும் விட பெரிதாக மதிப்பிடுவார்கள். ஆனால் அவர்களின் உறவு அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் மற்றொரு உறவை நிலைநிறுத்த அவர்கள் பயப்படுவதில்லை. நண்பர்கள் மற்றும் காதலர்களுக்கு அவர்கள் பெரிதும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு சௌகரியத்தை அளிக்கும் வரையில் மட்டுமே. உறவு நிலைக்க வேண்டுமே என எண்ணி அதற்காக அவர்கள் மெனக்கெடுவார்கள் என நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள். விவரங்களின் மீதும், விஷயங்களை சொதப்பாமல் செயல்படுத்துவதிலும், அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதே தான் ஏமாற்றுவதிலும் பொருந்தும். இந்த ராசிக்காரர்கள் ஏமாற்ற தொடங்கியதை உங்களால் அறிந்து கொள்ள கூட முடியாது.

துலாம்: முழுமையாக நம்பலாம்

பொதுவாக குதூகலமான காதலராக இருக்கும் இவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பார்கள். உங்களை வழிபாட்டு பொருளாக கருதுவார்கள் உங்கள் காதலரான துலாம் ராசிக்காரர்கள். நல்லது கெட்டது அனைத்திலும் உங்களுடன் துணையாக இருந்து உங்களை காதலிப்பார்கள். உங்கள் உறவு இறந்து போனாலும் கூட அவர்கள் உங்களுடன் இருப்பார்கள். அவர்களின் உறவில் பிரச்சனை என்ற அசிங்கமான தலை உள்ளே நுழையும் போது, இவைகளை தீர்க்க துலாம் ராசிக்காரர்கள் தங்களது சிறிய உலகத்திற்குள் நுழைவார்கள். பிரச்சனையை சமாளிக்க இப்படியொரு நியாயமான அணுகுமுறையை எடுப்பதால், பிரச்சனையை தீர்க்க முடியாது என அவர்களை சமாதானப்படுத்த முடியாது. மேலும், ஜோடியாக இருக்கையில் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் சிறந்தவர்களாக திகழ்வார்கள். துலாம் ராசிக்காரர்களின் நேர்மையை பரிசோதிக்க சமுதாய வலைத்தளம் மூலம் முயற்சி செய்து பாருங்கள்.

விருச்சிகம்: ஆச்சரியமூட்டும் வகையில் நம்பலாம்

தீவிர நம்பிக்கைக்கு புகழ் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். இருப்பினும், உச்சகட்ட ராசியாக, உங்கள் மீதுள்ள மரியாதையில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடுகளவு குறைவு ஏற்பட்டாலும், அவர்கள் வேறொரு காதலை நாடி சென்றிடுவார்கள். பரஸ்பர நம்பிக்கை தான் நேர்மைக்கான இரும்புக்கர சான்று. விருச்சிக ராசிக்காரர்களுடனான உறவு கடினமாக இருப்பதற்கு காரணங்கள் உள்ளது – தான் தான் எப்போதும் சரி என நினைப்பவர்கள் அவர்கள். அதனால் மன்னிக்கும் குணம் அவர்களிடம் குறைவாகவே இருக்கும். தங்கள் பக்கம் தான் தவறு என்பதை அவர்கள் உணர்ந்தால், “மறப்போம் மன்னிப்போம்” என்பது அவர்களை பொறுத்த வரை மிகவும் கஷ்டமாகும்.

தனுசு: அந்தளவிற்கு நம்ப முடியாது

பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் உங்கள் துணையாக இருந்தால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இவர்களுக்கு விதிமுறைகள் என்றாலே பிடிப்பதில்லை. குறிப்பாக கணவன் மனைவி உறவில் ஏற்படும் கட்டுப்பாடுகளும் கூட இதில் அடக்கம். இந்த ராசிக்காரர்கள் பல வகைகளை முயற்சிக்க விரும்புவார்கள். செக்ஸ் மற்றும் உறவுகளில் துணிகரமான செயல்களில் ஈடுபட முக்கியமாக விரும்புவார்கள். உங்களைக் காயப்படுத்த அவர்கள் ஏமாற்றுவதில்லை. இருப்பினும் உங்களுடனான உறவை துண்டிக்க இந்த செயலை அவர்கள் வேண்டுமென்றே செய்யலாம். இத்தகைய சுதந்திர விரும்பியானவர்கள் மீது ஏற்கனவே காதலில் விழுந்து விட்டால், அவர்களுக்கென தனிப்பட்ட இடத்தை, சுதந்திரத்தை அவர்களுக்கு அளியுங்கள்.

மகரம்: முழுமையாக நம்பலாம்

மகர ராசிக்காரர்கள் நிலைத்தன்மையை விரும்புபவர்கள்; குறிப்பாக உறவுகளின் மீது. எந்த வடிவிலான வெற்றிக்கும் கடின உழைப்பும், தீர்மானமும் தேவை என்பதை உணர்ந்தவர்கள் பெரும்பாலான மகர ராசிக்காரர்கள். இந்த இரண்டை பார்த்தும் பயப்படாதவர்கள் இவர்கள். எப்போதும் போல அவர்களின் உறவிலும் தடைகள் ஏற்படும் போது, அதனை சீர் செய்யும் பொறுமையை மகர ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள். எதிலாவது அட்டை போல் ஒட்டிக்கொள்வதற்கு சிறந்த உதாரணமாக இவர்களை கூறலாம். அதனால் லேசில் எதையும் விடு விட மாட்டார்கள். ஒவ்வொரு உறவுமுறை தடையும் ஒரு கற்றல் வாய்ப்பாகும். அதனால் உறவுமுறை மேம்படும் அல்லவா?

கும்பம்: அந்தளவிற்கு நம்ப முடியாது

தனுசு ராசிக்காரர்களைப் போலவே, ஒரு உறவில் நிலைத்து நீடிக்க கும்ப ராசிக்காரர்களையும் தைரியமாக சவாலுக்கு அழைக்கலாம். நீங்கள் சுவாரசியமானவராக, அற்புதமானவராக, கொஞ்சம் மர்மமானவராக இருந்தாலொழிய அவர்களின் தேவைகளை உங்களால் அவ்வளவு எளிதில் திருப்தி படுத்த முடியாது. சார்பில்லாமல் இருக்கும் இவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள். இந்த ராசிக்காரர்கள் மீது காதலில் விழும் பலரும் திருமண பந்தம் அல்லது தீவிர உறவை தவிர்த்து விடுவார்கள். அதற்கு காரணம் அவர்களின் சலிப்பூட்டும் தன்மை. இந்த ராசிக்காரர்களிடம் திறந்த புத்தகமாக இருப்பது உங்களை அதிக தூரம் அழைத்து செல்லாது. அதற்கு காரணம் அவர்களுக்கு எளிதில் சலிப்பு தட்டி விடும். அவர்களின் சிறந்த சொத்துக்களின் ஒன்று தான் அவர்களின் நேர்மை. அதனால் அவர்கள் உங்களை ஏமாற்றினாலும் கூட, அவர்கள் சுத்தமாக இருப்பார்கள்.

மீனம்: அந்தளவிற்கு நம்ப முடியாது

மிகவும் உணர்ச்சி பூர்வமான ராசிக்காரர்கள் தான் மீன ராசிக்காரர்கள். மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் உள் உணர்வுகளோடு போரிடுவார்கள். மீன ராசிக்காரர்கள் இரட்டை பண்புடையவர்கள் – அதாவது மொத்த துறவி அல்லது மொத்த பாவிகள். மீன ராசிக்காரர்கள் தங்களது சொந்த கற்பனை உலகத்தில் வாழ்வார்கள். அதனால் நிஜ உலகின் தேவைகளை கையாளுவதில் அவர்கள் சிரமப்படுவார்கள். இதில் உறவுகளும் அடக்கம். காதலரோ அல்லது உறவோ தங்களின் கற்பனை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவர்கள் சுலபத்தில் ஏமாற்றம் அடைவார்கள். தங்கள் அலைவரிசைக்கு ஒத்துப்போகிறவர்களுடன் தான் அவர்களின் கவனம் நீடித்து நிற்கும்.

Related posts

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

40 களில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சரும நல பழக்கங்களை இங்கே விவரிக்கிறோம்:

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

குளிர்கால மேக்கப் போடுவதற்கான டிப்ஸ்

nathan

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan