29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 juicecover1 09 1462793334 1523952712
தொப்பை குறைய

தொப்பையைக் குறைக்க உதவும் நோனி ஜூஸ் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? தெரிஞ்சிக்கங்க…

தற்போது நிறைய பேர் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். இன்று உடல் பருமன் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு பல்வேறு உணவுகள் உதவுகிறது. அதில் சில உணவுகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பலரும் அறியாத ஓர் பழம் தான் நோனி. இந்த பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் குடித்து வந்தால், அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும்.

இன்று பல்வேறு ஜூஸ் கடைகளில் நோனி ஜூஸ் விற்கப்படுகிறது. இந்த நோனி ஜூஸின் நன்மைகள் குறித்து பலருக்கும் தெரியாமல் இருப்பதால், இந்த ஜூஸை நிறைய பேர் வாங்கி குடிக்கமாட்டார்கள். அதேப் போல் திடீரென்று புதிய ஜூஸை யாரும் அவ்வளவு எளிதில் சுவைக்கமாட்டார்கள். அதுவே அதன் நன்மைகள் மற்றும் உடல் எடையைக் குறைக்கும் என்று கூறினால், நிச்சயம் அந்த ஜூஸை வாங்கிக் குடிக்க பலரும் முனைவார்கள்.

ஆனால் நற்பதமான நோனி ஜூஸ் கிடைப்பது என்பது அரிதானது. ஆனால் இதற்கு மாற்றாக நோனி கேப்ஸ்யூல் மற்றும் நோனி கூழ் பவுடர் போன்றவற்றை எடுக்கலாம். இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சரி, இப்போது நோனி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நோனி ஜூஸை எப்படி உட்கொள்ளலாம்? பொதுவாக நோனி ஜூஸை அப்படியே குடிக்கலாம். ஆனால் இந்த நோனி ஜூஸை பல்வேறு பொருட்களுடன் சேர்த்து குடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதிலும் சில காய்கறி ஜூஸ் அல்லது பழச்சாறுகளுடன் சேர்த்து கலந்து குடித்தால், இந்த ஜூஸ் மிகவும் சுவையாக இருக்கும். நோனி ஜூஸ் உடல் பருமன் மற்றும் தொப்பையால் கஷ்டப்படுவோருக்கு ஏற்ற அற்புதமான ஒரு பானமாகும். இதை தினமும் குடித்து வந்தால், நிச்சயம் எதிர்பார்க்கும் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

அமிலத்தன்மையை நிலையாக பராமரிக்கும் நோனி ஜூஸ் உடலில் அமிலத்தன்மையை நிலையாக பராமரிப்பதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலில் அதிகப்படியான அமிலத்தன்மையால் சந்திக்கும் பல்வேறு நோய்களின் அபாயங்கள் மற்றும் திசுக்களின் பாதிப்பைக் குறைக்கும்.

உடல் சுத்தமாகும் நோனி ஜூஸ் செரிமான பாதையில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கிருமிகளை அழித்து, உடலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும். நோனி ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவி புரிந்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இந்த ஜூஸ், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, முறையாக செயல்படச் செய்யும்.

இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கும் நோனி ஜூஸ் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் நோனி ஜூஸைக் குடித்து வந்தால், இது கணையத்தின் ஆரோக்கியத்தை சீராகப் பராமரித்து, இன்சுலினை சரியான அளவு வெளியிடச் செய்யும்.

உறுப்புக்களின் செயல்பாடுகள் நோனி ஜூஸ உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களான கல்லீரல், சிறுநீரகங்கள், இரைப்பை போன்றவற்றின் செயல்பாட்டை முறையாக நடைப்பெறச் செய்து, உடலுறுப்புக்களை சிறப்பாக செயல்படச் செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மாதவிடாய் கால பிரச்சனைகள் நோனி ஜூஸை பெண்கள் அடிக்கடி குடித்து வந்தால், அது கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் மற்றும் மாதவிடாய் கால பிடிப்புக்களைத் தடுக்கும். அதோடு நோனி ஜூஸ் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீரான இடைவெளியில் நடைபெற உதவிப் புரியும்.

மெலனின் அளவை சீராக்கும் நோனி ஜூஸ் பினியல் சுரப்பிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உடலில் மெலனின் தொகுப்பைப் பராமரிக்கிறது. மாகுலர் பிராந்தியத்தில் மெலனின் அளவுகளை பராமரிப்பதன் மூலம், மாகுலர் சீரழிவு மற்றும் குருட்டுத்தன்மையைத் தடுக்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தது நோனி ஜூஸில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நியாசின், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இதன் விளைவாக உடலில் தொற்றுக்கள் மற்றும் நோய்களின் தாக்கம் குறையும். மேலும் இது உடலில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோனி ஜூஸ் மூட்டு வலிகள் மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இந்த ஜூஸில் கால்சியம் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் நோனி ஜூஸில் உள்ள செலினியம், பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் சி போன்றவை ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, இரத்த நாள சுவற்றில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். முக்கியமாக இதில் உள்ள ஸ்கோபோலெதின் என்னும் பொருள், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இது இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. ஆகவே உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையக் குறைக்கும்.

குடல் பிரச்சனைகளை சரிசெய்யும் பல்வேறு குடல் பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், அல்சர், எரிச்சல் கொண்ட குடலியக்கம் மற்றும் இதர பிரச்சனைகள் அனைத்தும் நோனி ஜூஸை தொடர்ச்சியாக குடிப்பதன் மூலம் சரிசெய்யலாம். ஏனெனில் நோனி ஜூஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதோடு குடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகளவில் நிறைந்துள்ளது.

1 juicecover1 09 1462793334 1523952712

Related posts

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

nathan

தொப்பையை குறைக்கும் புஜங்காசனம்

nathan

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க! 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவது எப்படி?

nathan

தொப்பை குறைய உதவும் ஸ்விஸ் பந்து பயிற்சி

nathan

வயிற்று பகுதி சதையை குறைக்க உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

nathan

தொப்பையைக் குறைக்க நினைப்போர் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan