24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1521724002
மருத்துவ குறிப்பு

கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்றினை தவிர்க்க சில டிப்ஸ்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

கர்ப காலம் என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது, எல்லா பெண்களுக்கும் கர்ப காலம் என்பது மிகவும் வினோதமான அனுபவங்களைக் கொண்ட நாட்களாக இருக்கும். புத்துப்புது பிரச்சனைகள் உடல் உபாதைகள் எல்லாம் ஏற்படும்.

ஏற்கனவே பயத்தில் இருப்பவர்களுக்கு இது பெரும் கலக்கத்தையே கொடுத்துவிடுகிறது என்று தான் சொல்லவேண்டும். கர்ப்ப காலத்தில் எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு பிரச்சனை என்றால் அது சிறுநீர் தொற்று தான். அல்லது இதனை ஃப்ளேடர் இன்ஃபெக்‌ஷன் என்று அழைப்பார்கள். இந்த தொற்று பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.

பொதுவாக இந்தப் பிரச்சனை கர்ப்பமாகி ஆறு வாரங்களுக்கு பிறகு தான் பலருக்கும் ஆரம்பிக்கும். ஒருசிலருக்கு இது முன்ன பின்ன ஆகும். இதற்கு காரணம். சிறுநீர்பைக்கு அதிக அழுத்தம் ஏற்படுவது தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதோடு பிரசர் அதிகரிப்பதனால் சிறுநீர் கழிக்கும் போது அதில் சேர்ந்திருக்கும் சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாது. தொடர்ந்து இப்படி சிறுநீர் தேங்கியிருப்பதினால் அதில் பாக்டீரியா தொற்று ஏற்படக்கூடும்.

உடல் மாற்றங்கள் :

கர்ப காலத்தின் போது பெண்களுக்கு அதிகப்படியான உடல் மாற்றங்கள் நிகழக்கூடும். அதில் முக்கியமான ஒன்று உணவு ஒவ்வாமை. இதுவும் சிறுநீர் தொற்றிற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதைத் தவிர மலச்சிக்கல், கர்ப்பமான பின்பும் உறவு கொள்வது,கர்ப்பமான பின்பு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், கிட்னி தொடர்பான பிரச்சனைகள் ஏற்கனவே இருந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்தால் இவர்களுக்கு எல்லாம் சிறு நீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் :

சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருந்தால் அதனை சில அறிகுறிகளை வைத்து நீங்களே கண்டுபிடிக்கலாம், அதோடு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே மாத்திரைகளையோ அல்லது ஏதேனும் மருத்துவ முறையையோ கடைபிடிக்க வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது, மிகவும் குறைவான அளவில் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருப்பது, அடிவயிற்றில் விட்டுவிட்டோ அல்லது தொடர்ந்தோ வலியிருப்பது முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. இதைத் தவிர சிலருக்கு குமட்டலும் வாந்தியும் அதிகமாக ஏற்படும். பெரும்பாலும் இவை கருத்தரித்திருப்பதால் ஏற்படுகிறது என்று நினைத்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

குறை பிரசவம் :

இந்த சிறுநீர் தொற்று பிரச்சனை ஏற்பட்டால் உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். தொடர்ந்து அதனை அலட்சியப்படுத்தி கண்டுகொள்ளாமல் விட்டால் அந்த தொற்றானது மெல்ல கிட்னிக்கு பரவி விடும். இதனால் அருகில் இருக்கக்கூடிய கர்பப்பைக்கு பிரச்சனை ஏற்படும் சில நேரங்களில் இவை குறை பிரசவத்தை கூட ஏற்படுத்தும்.

இது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

பொதுவாக இதனை தீர்க்க மருத்துவர்கள் ஆண்ட்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதையும் தாண்டி, எளிமையான முறையில் வீட்டிலேயே இந்த பிரச்சனைகளை தீர்க்க சில குறிப்புகள்

தண்ணீர் :

இந்த பிரச்சனை வந்த பிற்பாடு என்றில்லாமல், தொடர்ந்து எப்போதுமே ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை குடித்துக் கொண்டால் இந்த பிரச்சனை வாராமலே தவிர்க்க முடியும். இந்த பிரச்சனை வந்த பிற்பாடு அதிகமாக தண்ணீர் குடியுங்கள். சிறிது நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனாலும் பரவாயில்லை. அப்படி தொடர்ந்து சிறுது நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பதினால் சிறுநீர் பையில் இருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று சிறுநீர் வழியாக வெளியேறவும் வாய்ப்பிருக்கிறது

எவ்வளவு குடிக்கலாம் :

சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அது வெயில் காலம்,அல்லது உங்களுக்கு இயல்பாகவே அதிகமாக வியர்க்கும் எனும் பட்சத்தில் இந்த தண்ணீர் அளவினை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

வெறும் தண்ணீரைத் தவிர காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், இளநீர், மோர் ஆகியவற்றையும் குடிக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

இதில் அதிகப்படியான என்ஜைம்ஸ் இருக்கீறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும். அதோடு இருப்பவற்றையும் அளித்திடும். அதோடு உடலின் பிஎச் அளவினை முறையாக பராமரிக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் வினிகரை கலந்து குடிக்கலாம்.வேண்டுமானால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள். இவை சுவைக்காகத்தான். ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம், நான்கு நாட்களுக்கு குடிக்கலாம்.

நெல்லிக்காய் :

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும். அதோடு நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர அவை மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிடும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், சோம்பலையும் தவிர்க்க உதவிடுகிறது.

வெறும் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் இல்லையென்றால்.நெல்லிக்காயை சிறிது சிறிதாக கட் செய்து ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் போட்டு விடுங்கள் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் கொதித்த பிறகு இறக்கி விடலாம். இந்த நீரை வடிகட்டி நன்றாக ஆறியதும் எடுத்து குடித்து விடுங்கள்.

ப்ளூ பெர்ரீ :

ப்ளூ பெர்ரீக்கு இயற்கையாகவே பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனால் பெண்கள் தங்களது கர்ப காலத்தில் இதனை பயன்படுத்தலாம். அதோடு ப்ளூ பெர்ரீகளில் விட்டமின் சி, பீட்டாகரோட்டீன், பொட்டாசியம், ஃபோலி ஆசிட் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கின்றன. இது தாய்க்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது.

விட்டமின் சி :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் விட்டமின் சியை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது உங்களுக்கும் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. அதோடு இது சிறுநீர் தொற்று ஏற்படாமல் தவிர்க்க பெரிதும் உதவிடுகிறது.

விட்டமின் சி எடுத்துக் கொள்வதால் உடலின் குறிப்பாக சிறுநீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்கச் செய்திடும். அதோடு விட்டமின் சி உங்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

ஆரோக்கியமான பழக்கங்கள் :

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இது தான். கழிவறைக்கு சென்ற பிறகு சுத்தமாக பிறப்புறுப்பினை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது அவசியம். உங்களது கை கால்களையும் நன்றாக கழுவ வேண்டும். சோம்பேறி தனத்தால் நீங்கள் அசட்டையாக இருக்கும் சில விஷயங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறது.

இதைத் தவிர ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.

Related posts

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியது

nathan

எலும்புக்கு உறுதி, புற்றுநோய்க்குக் கவசம்…. வெல்லப்பாகு தரும் தித்திப்பான பலன்கள்!

nathan

ஒருதலைக் காதல் : தப்பிக்க வழி சொல்லும் ஆய்வு

nathan

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு

nathan

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

nathan

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட இந்த ஒரே முலிகை போதும்!இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?

nathan

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…எலுமிச்சையை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா!!!

nathan