29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
heel pain 24 1490351320
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு குதிகால் வலி தாங்க முடியலையா? சூப்பரா பலன் தரும்!!

வயது அதிகரிக்கும் போது, உடலில் பிரச்சனைகளும் அதிகரிக்கும். எப்போது எப்பிரச்சனை ஆரம்பமாகும் என்றே தெரியாது. அப்படி ஆரம்பமாகும் பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வலி. இந்த வலியில் இருந்து விடுபட, பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும், எந்த பலனும் கிடைக்காமல் இருக்கும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் இயற்கை பானத்தின் மூலம், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். வயது அதிகரிக்கும் குதிகால் வலி வருவதற்கு, பாதங்கள் விரிவடைவது தான் காரணம். இப்படி விரிவடைவதால், குதிகால் எலும்புகளில் அழுத்தம் அதிகரித்து வலியை உண்டாக்குகின்றன. சரி, இப்போது குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் அற்புத பானம் குறித்து காண்போம்.

#1 முதலில் சிறிய அளவிலான இஞ்சியை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

#2 பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

#3 பின்பு துண்டுகளாக்கி வைக்கப்பட்டுள்ள இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 5-7 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

#4 பிறகு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

#5 இறுதியில் அதை வடிகட்டி தினமும் 3-4 முறை குடிக்க வேண்டும்.

குறிப்பு இஞ்சி டீயைக் குடித்து வருவதுடன், தினமும் 2 முறை இஞ்சி எண்ணெயைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், விரைவில் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

Related posts

கல்யாணத்துக்கு முன் மனரீதியாக தயாராகுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 9 விஷயங்கள் ஒரு நபரின் ஆயுளை குறைத்து விரைவில் மரணிக்க செய்யுமாம்!

nathan

சொரியாசிஸ் – தவிர்க்க வேண்டியவை

nathan

உங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சிப்பிக் காளான் வளர்ப்பு

nathan

முதுகு வலி ஏற்பட முக்கியக் காரணங்கள்!!!இந்த தினசரி பழக்கங்கள் தான்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! தொண்டை புண்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சையை அறிந்து கொள்ளுங்கள்..!!!

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

சிறுநீரக செயல்பாட்டை சீர்செய்ய உதவும் உணவு முறைகள்!

nathan