25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
healthyfood 1517
மருத்துவ குறிப்பு

மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

உண்மையில் எந்த உணவு சிறந்தது என்பதில் சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு உணவும் ஒவ்வொருவிதமான சத்துக்களையும் நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

சில உணவுகளில் புரோட்டீன் இருந்தால், மற்றதில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். ஆனால் அவைகளில் இதர வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் இல்லாமல் இருக்கும். எனவே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒருசில ட்ரிக்ஸ்களைப் பயன்படுத்த வேண்டும். அதாவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் கொண்டு சாலட் தயாரித்து தினமும் ஒரு பௌல் சாப்பிட்டாலே போதும்.

உடலைத் தாக்கும் நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு எந்த உணவுப் பொருளை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போருக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து அவற்றை அன்றாடம் சாப்பிடுங்கள். இதனால் மரணம் வரை கொண்டு செல்லும் நோய்களின் தாக்குதலில் இருந்து விலகி இருக்கலாம்.

பெர்ரிப் பழங்கள்

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம்.

* சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.

* உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

* புற்றுநோய் மற்றும் இதர நாள்பட்ட நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

* நார்ச்சத்து அதிகம் உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும், முறையாகவும் பராமரிக்கும்.

ஆரஞ்சு

* வைட்டமின் சி, ஃபோலேட், டயட்டர் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம்.

* நோய்த்தொற்றுக்களை எதிர்க்கும்.

* அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும்.

* பல் சொத்தை மற்றும் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.

* கண் பார்வைக்கு நல்லது.

* நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

* தலைமுடி உதிர்வது, மலச்சிக்கல் போன்றவற்றைத் தடுக்கும்.

தக்காளி

* வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம்.

* சிலவகை புற்றுநோயைத் தடுக்கும்.

* உயர் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* புறஊதாக் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

* தலைமுடி, சருமம், இதயம், சிறுநீரகம், கண்கள் போன்றவற்றிற்கு நல்லது.

* எலும்புகளின் வலிமையைப் பராமரிக்கும்.

பசலைக்கீரை

* வைட்டமின் ஏ, சி, கே, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம்.

* சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.

* எலும்புகளின் வலிமைக்கு உதவியாக இருக்கும்.

* கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* ஆன்டி-புற்றுநோய் பண்புகள் நிறைந்தது.

பீன்ஸ்

* புரோட்டீன்கள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, காப்பர், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு அதிகம்.

* புற்றுநோயை எதிர்க்கும்.

* இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

* கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

திணை

* புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம்.

* கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு.

* மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.

* அதிகளவிலான க்ளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

* இதய பிரச்சனைகளைத் தடுக்கும்.

* உடலின் ஆற்றல் உற்பத்திக்கு உதவும்.

* எலும்புகளின் ஆரோக்கியத்தை தக்க வைக்கும்.

* எடையைக் குறைக்க உதவும்.

கேல்

* வைட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்.

* இதய கோளாறுகளைத் தடுக்கும்.

* கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* மூளைக்கு நல்லது.

* சிறிது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

அவகேடோ

* வைட்டமின் ஈ, ஃபோலிக் அமிலம், பி வைட்டமின்கள், பொட்டாசியம், புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம்.

* இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* சருமம், கண்கள் மற்றும் தலைமுடிக்கு நல்லது.

* கொலஸ்ட்ரால் மற்றும் தேவையில்லாத கொழுப்புக்களைக் குறைக்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

* இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

* உடலின் ஆற்றலைப் பராமரிக்கும்.

* மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது.

* நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும்.

* செரிமானத்தை மேம்படுத்தும்.

தர்பூசணி

* வைட்டமின் ஏ, பி6, சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள், பொட்டாசியம் போன்றவை அதிகம்.

* தசைகளில் உள்ள காயங்களைக் குறைக்கும்.

* இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.

* பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.

* கண்கள் மற்றும் சருமத்திற்கு நல்லது.

* உடல் கொழுப்புக்களைக் கரைக்கும்.

க்ரீன் டீ

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளம்.

* மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

* புற்றுநோயின் அபாயம், சர்க்கரை நோய் மற்றும் இதய பிரச்சனைகளைக் குறைக்கும்.

* உடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

ப்ராக்கோலி

* வைட்டமின்களான ஏ, சி, கே, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகம்.

* எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

* வைட்டமின் டி குறைபாட்டைத் தடுக்கும்.

* புற்றுநோய், பக்கவாதம் மற்றும் இதர இதய பிரச்சனைகளை எதிர்க்கும்.

* அலர்ஜி மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* உடலினுள் உள்ள தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.

க்ரீக் தயிர்

* வைட்டமின் பி12, புரோட்டீன், புரோபயோடிக்குகள், அயோடின், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம்.

* எளிதில் செரிமானமாகும்.

* இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

* வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு மற்றும் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும்.

* எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டை

* வைட்டமின்களான பி2, பி6, பி12, புரோட்டீன்கள், ஜிங்க், காப்பர் மற்றும் இரும்புச்சத்து அதிகம்.

* நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவும்.

* இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

* கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நட்ஸ்

* புரோட்டீன்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம்.

* கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

* நினைவாற்றலை அதிகரிக்கும்.

* உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

* உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

* புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது எனத் தெரியுமா?

nathan

நகம் கடிக்கும் பழக்கம் இருக்குதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்ப காலத்தில் உங்கள் முடியை நிறம் செய்வது பாதுகாப்பானதா,

nathan

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

எச்சரிக்கை! மூடநம்பிக்கைகாக மாதவிடாய்-ஐ தள்ளி போடுவதா?

nathan

வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!!

nathan

முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்

nathan