பொதுவாக காலையில் தூங்கி எழுந்ததும் சூடாக எதாவது குடிக்க வேண்டும் நமக்குத் தோன்றும்.
அதில் நம்முடைய தேர்வு டீ அல்லது காபியாகத்தான் இருக்கும். ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்படிது அவ்வளவு நல்லதல்ல.
இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது ஏற்கனவே நம்முடைய வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரக்கும். இந்த சமயத்தில் காஃபைன் நிறைந்த டீயைக் குடிக்கக் கூடாது. அது அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறவர்கள் நிச்சயம் வெறும் வயிற்றில் டீ குடிக்கக் கூடாது. ரத்த சோகை பிரச்சினை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் டீ குடித்தால் வாந்தி, குமட்டல், தலைசுற்றல் ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடித்தால் அது பசியைக் கட்டுப்படுத்தும். பசி எடுக்காது. அதனால் காலை உணவு சரியான நேரத்துக்குச் சாப்பிட முடியாமல் போகலாம்.
காலை எழுந்ததும் டீ அல்லது காபி குடித்தால் தான் மலம் கழிக்கவே இலகுவாக இருக்கிறது என்று கூறுபவர்கள் பலர். ஏனெனில் அது குடல் இயக்கத்தினைத் தூண்டிவிடுகிறது. ஆனால் டீயில் உள்ள காஃபைன் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.