25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Menstrual fever and home remedies SECVPF
மருத்துவ குறிப்பு

வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்புதான்.

ஆனால் சிலருக்கு வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம் அடித்தாலோ, நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

இந்த பிரச்னைகளுக்கு வீட்டு வைத்திய முறைகளும் நல்ல பலன்களை அளிக்கும். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வெந்தய விதைகள் இரண்டு டீஸ்பூன் எடுத்து 500 மில்லி தண்ணீரில் சேர்த்து பாதியாக கொதிக்கும் வரை விடவும். பிறகு இந்த நீரை ஆறவைத்து வடிகட்டி குடித்து வரவும். நாள் முழுவதும் குடித்து வந்தால் வெள்ளைப்போக்கு கட்டுப்படும்.

வெண்டைக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளலாம். இதை தயிருடன் சேர்த்து எடுக்கலாம். தயிருடன் வெண்டைக்காய் ஊறவைத்து சேர்த்தும் எடுக்கலாம்.

கொத்துமல்லி விதைகளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவும். தொடர்ந்து 10 நாட்கள் வரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

நெல்லி மிட்டாய், நெல்லி பொடி, நெல்லி முரப்பா என எடுத்துகொள்வது வெள்ளை வெளியேற்றத்தை குணப்படுத்த உதவும்.

சிறிது துளசியை நீர் விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த பானத்தை தினமும் இரண்டு முறை குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும். பாலுடன் துளசியை சேர்த்தும் எடுக்கலாம்.

வெள்ளைக்கசிவு பிரச்சனையை போக்க அரிசி வேகவைத்த தண்ணீர் தொடர்ந்து அருந்தலாம். தொடர்ந்து வெள்ளை வெளியேற்ற பிரச்சனையால் அவதிப்பட்டால் இதிலிருந்து வெளியேறும் மாவுச்சத்து எடுப்பதன் மூலம் அவை தீவிரமாகாமல் கட்டுக்குள் வரும்.

வெள்ளைப்போக்கு அரிப்புடன் இருந்தால் சிறிது கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கலாம். அல்லது தேன் சேர்த்து தேநீராக்கி குடிக்கலாம். தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

வெள்ளைப்படுதலை வெளியேற்றத்தை நிறுத்த ஆப்பிள்சீடர் வினிகர் பயன்படுத்தலாம்.

தினமும் ஒரு கப் சர்க்கரை, உப்பு சேர்க்காத தயிர் சேர்த்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

வெள்ளைப்படுதலை நிறுத்த க்ரான்பெர்ரி உதவும்.தினமும் ஒரு கைப்பிடி க்ரான்பெர்ரி சேர்க்கலாம்.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!

nathan

நெஞ்சு சளியால் அவஸ்தையா? அப்ப இத படிங்க!

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. நீங்கள் போதுமான நீர் குடிக்காவிட்டால் உண்டாகும் பின்விளைவுகள் தெரியுமா?

nathan

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்ற மிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தைராய்டு குணமாக இதை குடிச்சாலே போதும் !… வெறும் வயிற்றில் சாப்பிடவும்

nathan

ஒரு கேள்வி உங்கள் வாழ்க்கையை மாற்றும்

nathan

சுவாச பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிக்க 5 அற்புதமான அத்தியாவசிய எண்ணெய்கள்..!!!

nathan