25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8 03 1464948628
கை பராமரிப்பு

பெண்களே உள்ளங்கைகள் மிருதுவாக இருக்க சூப்பர் டிப்ஸ்!

கைகளும் மிருதுவாக இருந்தால் நல்லாயிருக்குமே என நீங்கள் நினைப்பதுண்டா? தோழிகளுடனோ, காதலனுடனோ அல்லது கணவருடனோ கை கோர்த்து போகும்போது மிருதுவான கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என யோசித்ததுண்டா?

அதோடு நிறுத்திவிடாதீர்கள். உங்கள் உள்ளங்கைகளுக்கு சிறிது பராமரிப்பினை தாருங்கள். உங்களுக்கான எளிய பரமரிப்புதான் இங்கே சொல்லப்படுகிறது, உபயோகித்துப் பாருங்கள். எளிதில் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

சர்க்கரை மற்றும் விளக்கெண்ணெய் : சர்க்கரையை விளக்கெண்ணெயுடன் கலந்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் தூங்கப் போகும் முன் கைகளில் தேயுங்கள். ஐந்து நிமிடம் கைகளைன் முன்னும் பின்னும் தேய்த்து பின் கழுவுங்கள்.

அதற்கு பின் வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் சீக்கிரம் கடினத்தன்மை மறைந்து மிருதுவான கைகள் கிடைக்கும். விளக்கெண்ணெயைக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

தாவர வெண்ணெய் : தாவர வெண்ணெய் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் காலை மாலை என இரு வேளைகளில் கைகளில் தேய்த்து வந்தால், கைகளில் ஏற்படும் சொரசொரப்பு நீங்கி விடும். மிதமான ஈரப்பதத்தை அளிக்கும். இது கைகளில் ஏற்படும் சுருக்கத்தையும் போக்குகிறது.

பால் மற்றும் கிளசரின் : காய்ச்சிய பால் சிறிது எடுத்துக் கொண்டு அதில் கிளசரின் மற்றும் எலுமிச்சை சாறு 4 துளிகள் விடவும். இதனை கலக்கி, கைகளில் தேயுங்கள். நாளடைவில் உள்ளங்கைகள் மிருதுவாகும்.

முட்டை, பாதாம் : முட்டை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பாதாம் பொடி மற்றும் தேன் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை கைகளில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விடவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், உள்ளங்கைகளில் இருந்த கடினத்தன்மை போய்விடும்.

சோள மாவு : உங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருக்கிறதா? கவலையை விடுங்கள். எளிய வழி ஒன்று இருக்கிறது. சோள மாவில் சிறிது நீர் கலந்து கைகளில் பரபர வென்று தேயுங்கள். ஒரு வாரத்தில் உங்கள் உள்ளங்கைகள் மிருதுவாகும். நேரமும் குறைவு.

தக்காளி சாறு : தக்காளி சாறு சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எலுமிச்சை சாறு மற்றும் கிளசரின் சேர்த்து, நன்றாக கலந்து கைகளைல் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

குடி நீர் : நிறைய நீர் குடிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு குடித்தால் மொத்த சருமமும் மிருதுவாக இருக்கும். உடலில் போதிய அளவு ஈரப்பதம் இல்லையென்றாலும் உள்ளங்கைகள் சொரசொரப்பாக கடினமாக இருக்கும். தினமும் 10 டம்ளர் நீரினை தகுந்த இடைவெளியில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன எல்லா வழிகளுமே எளியவைதான் வீட்டில் செய்யக் கூடியவைதான். சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு உங்கள் கைகளை பராமரியுங்கள். பூனையின் பாதம் போன்ற உள்ளங்கைகள் உங்களுக்கு கிடைக்கும்.

Related posts

மெஹந்தி நிறம் பிடிப்பதே இல்லையா!

nathan

உங்கள் அக்குளில் உள்ள‍ கருமையை போக்க உங்கள் வீட்டிலேயே ஓர் எளிய வழி உண்டு!…

sangika

மென்மையான கைகள் வேண்டுமா

nathan

கையில் இருக்கும் மங்கிய மெஹந்தியை வேகமாக நீக்குவதற்கான வழிகள்!!!

nathan

மோதிரங்கள் அணிவதில் சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?…

sangika

பட்டுபோன்ற கைகளுக்கு!

nathan

கைகள் மென்மையாக இருக்க மெடிக்யூர்

nathan

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க -இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கைவிரல் மூட்டுக்களில் அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

nathan