25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
papaya2 09 1468055487
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

 

முகப்பரு, தழும்பு, கரும்புள்ளி, கருமை, கருவளையம் என நிறைய பாதிப்புகள் நம் சருமத்தில் ஏற்படுகிறது. இந்த எல்லா வித பிரச்சனைகளையும் வர விடாமல் தடுக்க முடியாது. ஆனால் வந்த பின் எப்படி குணப்படுத்தலாம் என பார்க்கலாம்

பப்பாளியை நீங்கள் நிச்சயம் ஆரோக்கியத்திற்கு, அழகிற்கும் பயன்படுத்தி இருப்பீர்கள். பப்பாளியை வெறுமனே உபயோகிப்பதை விட அதனுடன் இன்னும் அழகு தரும் பொருட்களை சேர்த்தால், அதன் பலன் இரு மடங்கு உங்களுக்கு கிடைக்கும்.

எல்லாருக்கும் ஒரே மாதிரி சருமம் இருப்பதில்லை. வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமத்தை நாம் பெரும்பாலோனோர் பெற்றிருக்கிறோம். அப்படி இருவிதமான சருமத்திற்கும் ஏற்றபடி பப்பாளியை எப்படி பயன்படுத்தலாம் என இங்கே குறிப்பிட்டுள்ளது. படித்து, செய்து பார்த்து பயன்பெறுங்கள்.

வறண்ட சருமத்திற்கான பப்பாளி பேக் : பப்பாளி – சில துண்டுகள் தேன் – 2 டீஸ்பூன் பால் – 3 டீ ஸ்பூன்

பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் பால் மற்றும் தேனை சேர்க்கவும். இவற்றை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

பால் மற்றும் தேன் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. பப்பாளி மென்மையான மிருதுவான சருமத்தை அளிக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உங்களுக்கு பளபளப்பான சருமத்தை தருகிறது.

எண்ணெய் சருமத்திற்கு : பப்பாளி – சில துண்டுகள் தேன் – 2 டீஸ்பூன் முல்தானி மட்டி – கால் டீஸ்பூன் நீர் – தேவையான அளவு

பப்பாளியை மசித்து அதனுடன் தேன் முல்தானி மட்டி மற்றும் சிறி நீர் கலந்து, இந்த கலவையை கண்கள் தவிர்த்து முகத்தில் தேய்க்கவும். இந்த கலவை நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவை உங்கள் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். மென்மையான பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.

 

Related posts

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்…..

nathan

முகத்தில் கரும்புள்ளி, கருந்திட்டுகள் இருக்கா ?இதை முயன்று பாருங்கள்

nathan

முகத்தில் அசிங்கமாக இருக்கும் சொரசொரப்பைப் போக்க வேண்டுமா?

nathan

வெயிலில் சரும நிறத்தை பாதுகாக்கும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

nathan

குளிரில் முகம் கருத்து போகுதா? இந்த ஒரே ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க

nathan

வெயிலால் நிறம் மாறும் முகத்தை பளிச்சிட சூப்பர் டிப்ஸ்…

nathan

கர்ப்ப காலத்தில் முகத்திற்கு எந்த மாதிரியான பேஸ்பேக் போடலாம்?

nathan

ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்………

nathan

முகத்தை பளபளவென மாற்ற இவற்றை தினமும் காலையில் செய்யுங்கள்!…

sangika