கருவளையங்களைப் போக்க இதுவரை வெள்ளரிக்காயைத் தான் பயன்படுத்தி வந்தீர்கள். ஆனால் அதையும் தான் மருத்துவ குணம் நிறைந்த தேனைக் கொண்டும் கருவளையங்களைப் போக்கலாம். இங்கு தேனைக் கொண்டு கருவளையங்களை எப்படிப் போக்குவது என்று காண்போம்.
தேன்
தேன் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர், டோனர் மற்றும் கிளின்சர். இந்த தேனை தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருவளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.
தேன் மற்றும் வெள்ளரிக்காய்
ஜூஸ் 1:2 என்ற விகிதத்தில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் தேனை எடுத்து நன்கு கலந்து, அதனைக் கொண்டு, தினமும் தடவி ஊற வைத்து கழுவி வரவும். இப்படி ஒரு மாதம் செய்து வந்தால், உங்கள் கண்கள் கவர்ச்சிகரமாக காணப்படுவதை நீங்கள் காணலாம்.
தேன் மற்றும் பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்க்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அத்தகைய பாதாம் எண்ணெய் 1/2 டேபிள் ஸ்பூன் தேனில் 4-5 துளிகள் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கும்.
தேன் மற்றும் வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அக்கலவையை கண்களைச் சுற்றி தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதோடு, கண்களில் உள்ள வீக்கமும் போகும்.
தேன் மற்றும் எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும். அதற்கு தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் விரைவில் அகலும்.