?
இந்த பாட்டி வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். அனேகம் பேர் இதனை முயற்சித்திருக்க மாட்டீர்கள்.
கசகசா, அதிமதுரம் : கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் நரை முடி மறையும். கூந்தலும் வளரும்.
சீகைக்காய் மற்றும் மோர் : தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.
வடித்த கஞ்சி : சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம். இதனால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
மருதாணி, தேங்காய்பால் : ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறட்சி, கரடு முரடான தன்மை ஆகியவை மறைந்து மிருதுவாகும்.
காய்கறி வைத்தியம் : வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப் அளவு) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். மறு நாள் அவற்றை பிழிந்து கிடைக்கும் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இப்படி செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.