26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
258208816e58b6790181c9913c1daf33fca42a1f08632880740516471604
அறுசுவைசைவம்

சுவையான பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

பன்னீர் – 250 கிராம்,

வெங்காயம் – 2,

மிளகாய் வற்றல் – 2

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,

எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்,

கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

எள் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

வேர்க்கடலை, தேங்காய்த் துருவல் – தலா 4 டேபிள்ஸ்பூன்,

தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,

தனியா, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,

பட்டை – சிறிய துண்டு,

கிராம்பு, ஏலக்காய் – தலா 3.

258208816e58b6790181c9913c1daf33fca42a1f08632880740516471604

செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது பன்னீரை சேர்த்து மிதமான தீயில் சமைக்கவும். பச்சை வாசனை போனதும், நெயில் எள் தாளித்து சேர்த்து, இறக்கிப் பரிமாறவும். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.

Related posts

சுவையான கொண்டைக்கடலை சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

சுவையான தேங்காய் பால் காய்கறி குழம்பு

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

கத்திரிக்காய் மசாலா கறி

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika