28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
home remedies for runny nose
மருத்துவ குறிப்பு

மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா?அப்போ இதை செய்யுங்கோ..!!

கோடையில் வெயில் அதிகம் கொளுத்தும் என்று பார்த்தால், மழை பொழிந்து வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல இதமான சூழ்நிலையைத் தருகிறது. அதே சமயம் திடீர் காலநிலை மாற்றத்தினால் சிலருக்கு இருமல், தொடர்ச்சியான தும்மல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகள் வரும்.

குறிப்பாக மூக்கு ஒழுகல் பிரச்சனை வந்தால் தான் நிம்மதி பறிபோகும். ஏனெனில் இந்த பிரச்சனையால் எந்த ஒரு வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. எப்போதும் மூக்கில் துணியை வைத்து துடைத்தவாறே இருக்க வேண்டியிருக்கும்.

எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில உடனடி நிவாரணிகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, மூக்கு ஒழுகலில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆவிப்பிடிப்பது

அளவுக்கு அதிகமான சளி சேரும் போது, மூக்கு ஒழுகல் மற்றும் தொடர்ச்சியான தும்மல் ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணியாக விளங்குவது ஆவி பிடிப்பது தான். அதிலும் கொதிக்கும் நீரில், சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, போர்வையினுள் அமர்ந்து ஆவி பிடித்து வந்தால், சளி அனைத்தும் வெளியேறி உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை லேசாக சூடேற்றி, மிதமான சூட்டில் உள்ள அந்த எண்ணெயின் 2-3 துளிகளை மூக்கினுள் விட்டால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல், தும்மல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் இந்த செயலை தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லாவிட்டால், கொதிக்கும் நீரில் சிறிது கடுகு எண்ணெய் மற்றும் சீரகம் சேர்த்து, அந்த நீரில் இருந்து வெளிவரும் ஆவியை நுகர வேண்டும். இப்படி செய்து வந்தாலும் மூக்கு ஒழுகல் நின்றுவிடும்.

மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை நீரில் கலந்து, குடித்து வர வேண்டும். இப்படி தினமும் 2 முறை குடித்து வந்தால், சளி தளர்ந்து வெளிவந்துவிடும். இல்லையெனில் இரவில் படுக்கும் போது வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சளி, இருமல், மூக்கு ஒழுகல், தொண்டைப்புண் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். முக்கியமாக அத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி

சிறிது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்றால் அல்லது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்தால், மூக்கு ஒழுகல் நின்றுவிடும்

பூண்டு

பச்சை பூண்டை வாயில் போட்டு மென்று வந்தால், மூக்கு ஒழுகல் நின்று விடும். மேலும் இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், மூக்கு ஒழுகல் பிரச்சனையே இருக்காது.

தேன்

தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து இரு வேளை குடித்து வந்தால் அல்லது எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கு ஒழுகல் நிற்கும்.

துளசி

வீட்டில் துளசி செடி இருந்தால், அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் மற்றும் இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதன் மூலம் சளி, இருமல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

Related posts

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் -ஆய்வில் புது தகவல்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!

nathan

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . .

nathan

மலம் கழிக்கும் போது ஏன் எரிச்சல் ஏற்படுகிறது

nathan

பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்

nathan

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் சிறுநீரை அடக்குபவரா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வர நேரிடும்

nathan