கர்ப்ப காலத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ள சில வழிமுறைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய முன்னோர்கள் வழி வழியாக தெரிந்து கொண்ட சில அறிகுறிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்று மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.
கர்ப்ப காலத்தில் அதிகமான வாந்தி ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாம். ஏனெனில் பெண் குழந்தைக்கான ஹார்மோன்கள் அதிகமாக வளர வேண்டியுள்ளதால் இந்த பாதிப்பு ஏற்படுமாம்.
கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவினை வைத்தும் கண்டுபிடிக்கலாம். அதிகமாக இனிப்பு, பசி எடுத்தால், பிறக்க போவது பெண்ணாகவும், உப்பு, புளிப்பு பசி எடுத்தால் ஆண் குழந்தை பிறக்க உள்ளது என்று அர்த்தமாம்.
கருவில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 140 துடிப்புகள் வரை இருந்தால் அது அது ஆண் குழந்தை. 140க்கு மேல் 160 வரை இருந்தால் பெண் குழந்தை என்பார்கள்.
உங்களுக்கு அதிக காலங்கள் சருமம் உடைதல் பிரச்சனை நீடித்தால் பெண் குழந்தை பிறக்குமாம். ஏனெனில் பெண் குழந்தை தாயின் அழகை திருடுகிறதாம்.
கர்ப்பிணி பெண்ணுக்குக் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்கக்கூடும்.
ஒரு தாய் தனது இடது பக்கத்தில் தூங்க விரும்பினால், ஆண் குழந்தை என்றும், அது வலது பக்கமாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று அர்த்தமாம்.