சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளையாக்கணுமா? இதை முயன்று பாருங்கள்

நாம் அனைவரும் கருப்பு தான் அழகு என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், சரும நிறத்தை அதிகரிக்க ஒவ்வொருவருமே முயற்சிப்போம். சிலர் க்ரீம்களைப் பயன்படுத்தினால், முகத்தில் பருக்கள் மற்றும் இதர பிரச்சனைகள் வந்துவிடும் என்று அவற்றைப் பயன்படுத்தமாட்டார்கள்.

சொல்லப்போனால் கெமிக்கல் கலந்த க்ரீம்களை விட, இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பது தான் சிறந்தது. இயற்கை வழிகளால் பலனைத் தாமதமாக பெற நேரிட்டாலும், அது நிரந்தரமானது மற்றும் ஆரோக்கியமானது என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கருமையாக இருக்கும் சருமத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முக்கியமாக எலுமிச்சை சாறு பயன்படுத்திய பின், இறுதியில் தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இதனால் அதில் உள்ள சிட்ரிக் அமிலத்தால் ஏற்படும் கடுமையான வறட்சியைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவுங்கள். இப்படி செய்வதன் மூலம், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.

கடலை மாவு, மஞ்சள் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் பாலுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் சரும கருமை அகலும்.

மைசூர் பருப்பு, தக்காளி மற்றும் கற்றாழை 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து கலந்து, கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கனிந்த பப்பாளி மற்றும் தேன் 1/2 கப் பப்பாளியை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெயிலால் கருமையான சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமம் சீக்கிரம் வெள்ளையாகும்.

ஓட்ஸ் மற்றும் மோர் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் மோர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்தால், சருமம் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.

தயிர் மற்றும் தக்காளி 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தக்காளி கூழை ஒன்றாக கலந்து, பின் பாதிக்கப்பட்ட கருமையான இடத்தில் தடவி, 1/2 மணிநேரம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி செய்வதால், அவற்றில் உள்ள அமிலத்தன்மை கருமையை விரைவில் போக்கும்

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தயிர் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவ வேண்டும். பின் 1/2 மணிநேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி இந்த மாஸ்க்கைப் போட்டால் சருமம் வெள்ளையாகும்.

மில்க் க்ரீம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி 5 ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாறு எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த செயலால் சரும கருமை வேகமாக அகலும்.

சந்தன பேஸ்ட் தினமும் இரவில் படுக்கும் முன் சந்தனத்தை முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ முகம் பிரகாசமாக இருக்கும்.

சந்தனப் பவுடர் மற்றும் இளநீர் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடருடன் இளநீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கருமையான பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 4-5 முறை செய்ய முகப் பொலிவு மேம்படும்.

அன்னாசி கூழ் மற்றும் தேன் அன்னாசி கூழுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வெயிலால் கருமையான இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்திக் கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள் மற்றும் பால் சிறிது மஞ்சள் பொடியுடன், பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்வது சருமத்திற்கு மிகவும் நல்லது.

உருளைக்கிழங்கு தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள நீங்கா கருமையும் எளிதில் நீங்கிவிடும்.

23 1514018524 14 turmericonface

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button