27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
wethair 163
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

பெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குபெண்களுக்கு அழகே கூந்தல்தான், அந்த கூந்தல் உதிர்ந்தால் ஏதோ அவர்கள் அழகில் கொஞ்சம் பாதி குறைந்துவிடும்.றைந்துவிடும்.

இதற்கு மருத்துவரை சென்று பார்ப்பதைவிட, இயற்கையான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது.

ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறியபின் கூந்தலை சீயக்காய் போட்டு அலசவும்.

கூந்தல் நன்றாக வளரும். கடுக்காய், செம்பருத்தி பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சமஅளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

முடிசெழித்து வளர வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக்போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி மிருதுவாக வளரும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலை 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்கவேண்டும்.

சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத்துணியில் அதை வடிகட்டவும்.

குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

Related posts

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

நீளமான கூந்தலுக்கான அழகு குறிப்புகள்

nathan

வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சை செய்ய,, அதிக செலவில்லாமல், வீட்டிலேயே பழைய சாதத்தை கொண்டு கெரடின் சிகிச்சை அளிக்கலாம்.

nathan

முடி வேகமாக வளர தயிரோடு ‘இந்த’ பொருட்களை சேர்த்து தயாரிக்கும் பேஸ்டை யூஸ் பண்ணுங்க…!

nathan

பொடுகு ( #Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடி ( Hair ) யை காப்பாற்ற ஓர் எளிய வழி!…

sangika

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

நிரந்தர ஸ்ட்ரையிட்டனிங்க் செய்வதால் உண்டாகும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!!

nathan