25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201402140
சமையல் குறிப்புகள்

சூப்பரான கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க…

தேவையான பொருள்கள்:

பரோட்டா – 2

முட்டை – 1
வெங்காயம் – 2
எண்ணெய் – 4 ஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

அடுத்து தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

சுட சுட சுவையான கொத்து பரோட்டா தயார்.

இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

Related posts

முட்டை சப்பாத்தி ரோல்

nathan

பாலுடன் இந்த இரண்டு பொருளை கலந்து குடித்தால் போதும்! சூப்பர் டிப்ஸ்

nathan

கெட்டுப்போன பாலை வீசிடாதீங்க…! சுவையான கேக் செய்யலாம்…

nathan

பன்னீர் 65

nathan

செட்டிநாடு மசாலா சீயம்

nathan

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட… ஜீரண சக்தி அதிகரிக்கும்!…

sangika

மஞ்சள் வெங்காய சட்னி

nathan

தக்காளி கெட்சப் பாஸ்தா!

nathan

செட்டிநாடு இட்லி பொடி

nathan