Kaduku
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

Related posts

உங்களுக்கு தெரியுமா டெட்டனஸ் தொற்றை தடுக்கும் இந்த வகை மஞ்சள் !

nathan

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா?

nathan

நசுக்கிய‌ ஏலக்காயை நீரில் கொதிக்க‍ வைத்து பனைவெல்ல‍ம் சேர்த்து குடித்து வந்தால் . .

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! மூட்டு வலியை அடியோடு அழிக்கும் முடக்கதான் கீரை வாழை இலை இட்லி.. எப்படி செய்வது?..

nathan

கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்

nathan

உங்க வாய் பயங்கரமா நாறுதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

உடலுறவு கொள்ளும் போது ஏன் வலிக்கிறது என்று தெரியுமா?

nathan

கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் இந்த அற்புத பொருள்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு??

nathan