35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
3 facepack
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இதை முயன்று பாருங்கள் – முட்டைகோஸ் பேஷியல்

முகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டைகோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம்.

காய்கறியை கொண்டு பேஷியல் செய்வதற்கு முன்பாக சருமத்தை நன்றாக தூய்மைபடுத்த வேண்டும். காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் நன்றாக அழுத்தி துடைக்கவும். பின்னர் முட்டைக்கோஸை பச்சையாக அரைக்கவும். பின்னர் அரைத்த விழுதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து வடிகட்டி சாறு எடுத்து தனியா வைக்கவும்..

முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

Related posts

சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக் கூடாது?

nathan

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – நீதிமன்றம் போட்ட உத்தரவு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அழகில் செலுத்தவேண்டிய அக்கறை

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

அழுக்குகளை நீக்க வீட்டிலேயே செய்யலாம் பிளீச்சிங்

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற

nathan

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் மருக்களா? இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு

nathan