25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Moisturizers For Oily Skin
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர்கள் இருப்பதால், பலரும் சருமத்திற்கு அதைப் பயன்படுத்துவதில்லை.

சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த நேச்சுரல் டோனர்களைப் பயன்படுத்துங்கள்.

• வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

• சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

• கற்றாழை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்.

• வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.

• ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம். இந்த முறைகளில் உங்களுக்கு தேவையான முறையை பயன்படுத்தி சருமத்தில் உள்ள அழுக்கை போக்கி முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று மாற்றலாம்.

Related posts

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பால் குளியல்

nathan

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்

nathan

சருமத்தை மெருகூட்ட மூன்று வழிகள் !!

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு!

nathan

சருமம் பிரச்சனைகளை நீக்கி, முகம் பொலிவாகவும், அழகாகவும் இத செய்யுங்கள்!…

nathan

முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும்

nathan

சருமம் காப்பது சிரமம் அல்ல!

nathan