24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
teeth care
மருத்துவ குறிப்பு

ஆரோக்கியமான பற்களைப் பெறுவதற்கான முக்கியமான டயட் டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

நீங்கள் உண்ணும் உணவுகள் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள வளமையான உணவுகள் உங்கள் பற்களையும், ஈறுகளையும் திடப்படுத்தும். அதனால் தான் பற்சொத்தைகளை தடுப்பதற்கும், முத்துப்போன்ற வெண்மையான சிரிப்பை பெறுவதற்கும் டயட் கவுன்செலிங் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

 

“நோயாளிகள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வளர்ப்பதற்கு அவர்களுக்கு உதவிட பல் மருத்துவர்கள் உணவு பிரமிட் என்ற பொதுவான கருவியை பயன்படுத்துகின்றனர்.” என புது டெல்லியில் உள்ள சஃப்டர்சங் மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவர் மற்றும் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்)-ன் ஆராய்ச்சி பயிற்சி பெறுபவரான டாக்டர் கஞ்சன் சவ்லாணி கூறுகிறார். இந்த பிரமிட் பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா?

பாதுகாப்பை அளிக்கும் உணவுகள்

சில உணவு பொருட்கள் பற்சொத்தைகளை ஓரளவிற்கு தடுக்கும். அதனால் அவைகளை பாதுகாப்பான உணவுகள் என கூறுகிறார்கள். இந்த உணவுகள் கால்சியம் மற்றும் பாஸ்ஃபேட்களை வளமையாக கொண்டிருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கடலைப்பருப்பு, லெக்டின், கொக்கோ, பன்னீர் போன்றவைகள். வாயில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் அமிலத்தை போக்கி, பற்களின் எனாமெலை சுற்றி பாதுகாப்பு தடையை உருவாக்குவதில் இது ஓரளவிற்கு மட்டுமே செயல்படும். குடிநீர் மற்றும் உணவில் ஃப்ளோரைட் (தோராயமாக 1 பி.பி.எம்) இருப்பது உங்கள் பற்களை திடப்படும். அதோடு சொத்தை உருவாகுவதையும் தடுக்கும்.

பிரட், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்

நூடுல்ஸ், பாஸ்தா, பிஸ்கட் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்ற ரிஃபைன் செய்யப்பட்ட தானியங்களை காட்டிலும், ரொட்டி, பரோட்டா, கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற முழு தானியங்களை தேர்ந்தெடுக்கவும். ரீஃபைன் செய்யப்பட்ட தானியங்கள், ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை போன்றவையில் புளிப்பேறத்தக்க கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்துள்ளது. பற்களில் துவாரங்கள் ஏற்படுவதன் பின்னணியில் உள்ள அமில உற்பத்திக்கு முக்கிய குற்றவாளியாக இருப்பது இது தான்.

பழங்களும்.. காய்கறிகளும்..

இது உங்கள் உணவில் வண்ணத்தை அளிப்பதோடு மட்டுமல்லாது பல விதமான உடல்நல பயன்களையும் அளிக்கிறது. அதோடு நின்று விடாமல் உலர்தீவனமாகும் செயல்படுகிறது. இவைகளை நன்றாக மென்று உண்ண வேண்டும். இதனால் எச்சில் சுரப்பது அதிகரிக்கும். பற்களில் துவாரங்கள் ஏற்படாமல் பாதுகாக்க இது மிகவும் தேவையான ஒன்றாகும். பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் புரதங்கள் வளமையாக இருக்கும். இது உங்கள் பற்களையும் எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள்

உங்கள் உணவில் இந்த பொருட்களில் தான் கால்சியம் வளமையாக உள்ளது. ஒருவர் தினமும் 250-500 மி.லி. அளவில் பால் குடிக்க வேண்டும். குறைந்த அளவில் கொழுப்பை கொண்ட கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடியுங்கள். முழு பாலை அதிகமாக பயன்படுத்தினால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.

ஆட்டிறைச்சி, மீன், கோழி மற்றும் முட்டைகள்

ஆட்டிறைச்சியில் புரதம், இரும்பு, ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 வளமையாக உள்ளது. WHO உணவு வழிகாட்டல் பிரமிட் பரிந்துரைப்பது படி, பெரியவர்கள் தினமும் 220-330 கிராம் வரையிலான இறைச்சியை உண்ணலாம். இறைச்சி இல்லையென்றால், சைவ உணவுகளை உண்ணுபவர்கள் டோஃபு, பீன்ஸ், முளைத்த பயறுகள், நட்ஸ் மற்றும் அதிக புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை உண்ணலாம்.

கொழுப்புகள், எண்ணெய்கள் மற்றும் இனிப்புகள்

அதிக சாச்சுரேட்டட் கொழுப்புகளை கொண்ட நெய் மற்றும் வெண்ணெய்க்கு பதிலாக குசம்பப்பூ, சூரிய காந்தி, கார்ன், சோயாபீன்ஸ், கோதுமை எண்ணெய் போன்ற பி.யூ.எஃப்.ஏ. (பாலி அன்சேச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்ஸ்) வளமையாக உள்ள எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள். சாக்லேட், காரமெல் மற்றும் க்ரீம் பிஸ்கட் போன்ற இனிப்புகளை அதிகமாக உண்ணுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு காரணம் அவைகள் பற்களின் மீது ஒட்டிக் கொள்ளும். இதனால் பற்கள் சொத்தையாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

Related posts

அவசியம் படிக்க..இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள்

nathan

கால்சியம் சத்து பெருக என்ன வழி?

nathan

கட்டியோ கழலையோ காணப்பட்டால் கவனம்!

nathan

கழுத்து மட்டும் கருப்பா இருக்கா…இந்த ஆபத்தான நோய் உங்களை தாக்கி விட்டது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஒருதலை காதலர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி?

nathan

முழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்

nathan

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan