கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
பொடிக்க:
மிளகு, கசகசா – தலா 1 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
முந்திரி – 4,
கறிவேப்பிலை – 1 கப்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 6.
செய்முறை:
- கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.
- பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.