நம் உடல் ஒரு கணினி என்றால் மூளை என்பது ஸ்டோரேஜ் இடம். மற்றும் இங்கிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு மற்ற உடல் பாகங்களும், உறுப்புகளும் இயங்குகின்றன. இதை தவிர, நமது கை மற்றும் பாதம் போன்ற பகுதிகளிலும் சில கட்டுப்பாடு சாதனங்கள் இருக்கின்றன.
அவை, நம் உடலில் ஏற்படும் சில உடல்நல கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. நம் முன்னோர்கள், இவற்றை, யோகா, ஆசனங்கள், முத்திரைகள் போன்றவற்றின் மூலம் பின்பற்றி வந்துள்ளனர்.
இதை தான் ஆங்கில மருத்துவம் ரெஃப்ளக்ஸாலஜி (Reflexology) என்று குறிப்பிடுகிறது. அதாவது, நமது கை மற்றும் கால்களில் இருக்கும் சில அழுத்த புள்ளிகள் மற்றும் சுரப்பிகளை சரியான முறையில் தூண்டுவதனால் சில உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வு காண இயலும்.
இனி, உங்கள் பாதங்களில் உள்ள ஏழு அழுத்தப் புள்ளிகளை தூண்டுவதனால், எந்தெந்த உடல் பாகங்களுக்கு உடல்நல நன்மைகள் ஏற்படுகின்றன என்று பார்க்கலாம்…
ஹைபோதலாமஸ் சுரப்பி (Hypothalamus Gland)
ஹைபோதலாமஸ் சுரப்பி பசியின்மையை சரி செய்ய உதவுகிறது.
பிட்யூட்டரி (Pituitaray Gland)
பிட்யூட்டரி சுரப்பி, ஒரு வகையில் மாஸ்டர் சுரப்பி என்று குறிப்பிடப்படுகிறது. இது அனைத்து ஹார்மோன்களும் நன்கு சுரக்கவும், வளர்ச்சி அடையவும் உதவுகிறது.
தைராய்டு சுரப்பி (Thyroid Gland)
வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது தைராய்டு சுரப்பி.
உதரவிதானம் (Diaphargm)
இது மன அழுத்தத்தை குறைக்கவும், நல்ல முறையில் சுவாசத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
அட்ரினல் சுரப்பி (Adernal Gland)
அட்ரினல் சுரப்பி, உடலில் சக்தியை அதிகரித்து, கலோரிகளை கரைக்க உதவுகிறது.
சிறுநீர்ப்பை (Urinary Bladder)
சிறுநீர்ப்பையை சுத்திகரிக்கவும், சிறுநீர் நன்கு வெளியேறவும் உதவும்.
பெருங்குடல் (Colon and Intestines)
பெருங்குடல் இயக்கத்தை சீராக்கி, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.