28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
woman hair b
தலைமுடி சிகிச்சை

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

பலருக்கும் செம்பட்டை முடி இருக்கும். இதை போக்க அதிகம் தேங்காய் எண்ணெய்யை பலரும் பயன்படுத்துவார்கள். ஆனால், இதனுடன் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்தால் பலன் இன்னும் நன்றாக கிடைக்குமாம். 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில் 20 சொட்டுகள் கலந்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக, இதோடு பன்னீர் அல்லது தண்ணீர் கொண்டு உச்சந்தலையில் இலேசாக ஸ்ப்ரே செய்து கொள்ளவும். வறண்ட தலையில் எவ்வளவு எண்ணெய் வைத்தாலும் அது போதுமானதாக இருக்காது.

லேசாக தண்ணீர் தெளித்து ஈரப்பதமாக வைக்கும் போது பலன் கிடைக்கும். செய்முறை முதலில், உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து பிறகு இந்த எண்ணெயை உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் தலையை ஹேர் கவர் போட்டு விடவும். இரண்டு மணி நேரம் கழித்து கூந்தலை நன்றாக அலசி எடுக்க வேண்டும். கூந்தலின் ஒவ்வொரு இழையும் வலுவாகவும் இருக்கும். முடிக்கு நல்ல மாய்சுரைசராக இருக்கும்

. தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். முக்கியமாக செம்பட்டை முடி உடையவர்கள் என்ன பராமரிப்பு செய்தாலும் தலைக்கு குளிக்கும் போது வெந்நீர் இல் குளித்தால் அவை பயன் தராது. தவிர்க்க முடியாதவர்கள் வெதுவெதுப்பான நீரை சேர்த்துகொள்ளுங்கள்.

முடிந்தவரை மந்தமான அல்லது குளிர்ந்த நீரில் தலையை அலசுங்கள். இது செம்பட்டை தீவிரமாகாமல் தடுக்கும். செம்பட்டை முடி இருப்பவர்கள் வெயிலில் செல்லும் போது அதன் தீவிரம் அதிகரிக்கலாம். வெளியில் செல்லும் போது குடை, அல்லது கேப் பயன்படுத்தலாம்.

மேலும், கூந்தலில் எண்ணெய் தடவி செல்வதன் மூலம் இவை சூரியனிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும். உச்சந்தலையில் இருக்கும் நுண்ணறைகள் மூடி இருந்தால் அதன் நிறம் இழக்காது. ஆனால் இவை இராசயனங்கள் மற்றும் ஸ்விம்மிங், வெயில் போன்றவற்றால் திறந்திருக்கும். இதனாலும் நிறமி இழக்கப்பட்டு செம்பட்டையாகலாம் இதற்கு வீட்டு வைத்தியமாக கற்றாழை உதவும்.

இதை ஹேர் கண்டிஷனிங் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். இதனால் நுண்ணறைகள் இருக்கும் பகுதிக்கு சென்று அந்த துளைகளை மூட செய்யும். அடுத்ததாக நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்று எடுத்து நன்றாக கூழ் போல் மசிக்கவும்.

அதில் தயிர் கால் அல்லது அரை கப், கலந்து கொள்ளவும். இது க்ரீம் பதத்துக்கு கிடைக்கும். இதை முடியில் பாகம் பாகமாய் பிரித்து தடவி 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை விட்டு பிறகு கூந்தலை அலசி எடுத்தால் கூந்தலின் நிறம் கருமையாகும்.

வெங்காய சாறு ஆனது சல்ஃபர் உச்சந்தலை நுண்ணறைகளைத் தடுக்கும். முடி உடைதலைத் தடுக்கும். அரை லிட்டர் நல்லெண்ணெயில் சிறு வெங்காயம் பொடியாக நறுக்கி கால் கப் அளவு சேர்க்கலாம் இதை கொதிக்கவிடவும்.

இந்த வெங்காயம் நன்றாக சுருங்கும் வரை கொதிக்க விடவும். இதை இறக்கி ஆறியதும் வடிகட்டி விடவும். பிறகு கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தி வைத்து தலைக்கு குளிக்கும் போது அரை-மணி நேரம் முன்-னதாக உச்சந்தலையில் மசாஜ் செய்து பிறகு தலைக்குக் குளித்து வந்தல் முடி செம்பட்டை மறையும்.

Related posts

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

சூப்பர் டிப்ஸ் பலவீனமான தலைமுடியை வலிமையாக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய

nathan

podugu poga tips in tamil – பொடுகு நீங்க சிறந்த வழிகள்

nathan

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

nathan

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

ஆளிவிதை ஜெல் செய்து யூஸ் பண்ணினா உங்கள் கூந்தல் நீளமா வளரும்! !!

nathan

பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்க…..

nathan

உங்களுக்கு தெரியுமா பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது…

nathan