தேவையானவை
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பூண்டு – 6 பல்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டெபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
அரைப்பதற்கு
தேய்காய் துருவல் – கால் கப்
முந்திரி – 6
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கி ஒன்றரை கப் நீர்விட்டுக் கொதிக்க விடவும்.
காய்கள் வெந்ததும் அரைத்தவற்றைச் சேர்த்து மேலும் இரண்டு கொதிவிட்டு கரம் மசாலாத்தூள் சேர்த்து இறக்கவும். கொத்தமமல்லித்தழை தூவிக் கலந்துவிடவும்.
இந்த சால்னா (குருமா, குழம்பு, சாம்பாரைவிட) சற்று நீர்க்கத்தான் இருக்கும். இட்லி தோசை, சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி போன்றவற்றுக்குத் தொட்டுச் சாப்பிட ஏற்றது.