02 1422886555 soya balls gravy
அசைவ வகைகள்

மீல் மேக்கர் கிரேவி

இரவில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் மீல் மேக்கரைக் கொண்டு கிரேவி செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Soya Balls Gravy Recipe
தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பால் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் 3-4 முறை அலசி, பின் அதில் உள்ள நீரை பிழிந்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீல் மேக்கரை போட்டு 2 நிமிடம் வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியை போட்டு, சிறிது நேரம் வேக வைத்து, பின் அந்த தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப்போல் வெங்காயத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து 10 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து சிறிது நேரம் கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் காய்ந்த வெந்தய இலையை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு இறக்கி, பின் அதில் பால் சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

Related posts

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: கப்ஸா சோறு

nathan

Chettinad chicken kulambu in tamil |செட்டிநாடு சிக்கன் குழம்பு |deepstamilkitchen

nathan

KFC சிக்கன்

nathan

மீன் பிரியாணி

nathan

ஆட்டு குடல் சாப்பிடுவதால் ஏதேனும் நன்மைகள் உண்டா?

nathan

ஆந்திரா சாப்பல புலுசு (மீன் குழம்பு)

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan