தற்போது வெளியூர்களில் தங்கி வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம். அப்படி வெளியூர்களில் தங்குவோர் ஹோட்டலில் சாப்பிட விரும்பாமல், தாங்களே சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள். நீங்களும் அப்படியெனில் உங்கள் அம்மாவின் கைமணம் கொண்டவாறு சுவையாக சமைத்து சாப்பிட நினைத்தால், தமிழ் போல்ட் ஸ்கை பல பேச்சுலர் ரெசிபிக்களை கொடுத்துள்ளது.
இங்கு அதில் ஒன்றாக பேச்சுலர் ரசம், அதாவது தக்காளி ரசத்தை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.
Bachelor Rasam
தேவையான பொருட்கள்:
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
ரசப் பொடி – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 (தட்டியது)
பச்சை மிளகாய் – 2 (லேசாக அரைத்தது)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
ரசப்பொடி செய்வதற்கு…
துவரம் பருப்பு – 1/2 கப்
வரமிளகாய் – 15
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூளை தவிர அனைத்தையும் சேர்த்து வறுத்து இறக்கி, அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் புளிச்சாறு, தண்ணீர் மற்றும் தக்காளி சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் கொத்தமல்லியைத் தவிர அனைத்தையும் சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
ரசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பேச்சுலர் ரசம் ரெடி!!!