26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Teeth 2
மருத்துவ குறிப்பு

மஞ்சள் நிறமாக பற்கள் மாற என்ன காரணம்?

பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

உண்மையில் பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால், சிலருக்கு தன்னம்பிக்கையே சமயத்தில் நொறுங்கிவிடும்.

 

எனவே இவற்றை முடிந்தளவு போக்குவது நல்லது. தற்போது மஞ்சள் பற்கள் மஞ்சளாக மாற காரணம் என்ன? இவற்றை எப்படி போக்கலாம்? என்று பார்ப்போம்.

 

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்?

 

ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடித்தல். அதாவது புகைப்படித்தல், மது அருந்ததுதல்.
காஃபி மற்றும் கார்ப் அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்.
தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷை பயன்படுத்துவதால், பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்.
ப்ளூரைடு நிறைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துதல்.
உடல் பிரச்சனைகளால் அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்
தற்போது இதனை எப்படி போக்கலாம் என்று இங்கே பார்ப்போம்.

 

1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும். பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும்.ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும். இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.
வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.
காலையில் பற்களைத் துலக்கும் போது, பேஸ்ட்டுடன் ஆரஞ்சு ஆயிலை 2-3 துளிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும். இப்படி காலை மற்றும் இரவு நேரத்தில் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.

1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயினுள் விட்டு 15-20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இச்செயலை செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து எண்ணெயை வாயில் இருந்து வெளியேற்றி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்த நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். பின் எப்போதும் போன்று பிரஷ் செய்யுங்கள். இச்செயலால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஏராளமான நன்மைகளும் கிடைக்கும்.
சாம்பல் கிடைத்தால், அதை கை விரலால் தொட்டு பற்களை 2 நிமிடம் துலக்க வேண்டும். பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய, சாம்பல் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் மஞ்சள் கறைகளை உறிஞ்சி வெளியேற்றி, பற்களை வெண்மையாக காட்டும்.
1 கப் 2-3.5% ஹைட்ரஜென் பெராக்ஸைடை, 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை வாயில் விட்டு 30-40 நொடிகள் கொப்பளித்து துப்ப வேண்டும். பின்பு சாதாரண நீரால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பற்கள் வெண்மையாகவும் வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

Related posts

கருவளத்தை அதிகரிக்க மனைவிமார்கள் குடிக்கவேண்டிய அபூர்வ மூலிகை லிட்சி இலைச் சாறு!!முயன்று பாருங்கள்

nathan

முதுகுத்தண்டு முத்திரை விரல்கள் செய்யும் விந்தை!

nathan

இன்சுலின் செடி – சர்க்கரை நோயாளிகளின் வரமா?

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

உங்களுக்கு தெரியுமா சித்தர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த விருட்சங்கள் தான் காரணமாம்..!

nathan

இவ்வளவு விஷயத்திற்கு பயன்படுத்த முடியுமா முடக்கற்றான் இலையையும், வேரையும் ?????

nathan

உங்களுக்கு வாய் துர்நாற்றத்தால் கவலையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

nathan