28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 61e63ee437e07
அழகு குறிப்புகள்

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

சினிமாவில் சூப்பர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு, வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு இயக்குனராக அவதாரம் எடுத்து சாதனை படைத்து வருகிறார்கள். ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி உள்ளார்.

அதேபோல் சவுந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படமும் இயக்கியுள்ளார். ஆனால், இருவருக்கு எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை.

இதனால் இருவரும் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இதனையடுத்து, நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். அதேபோல் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை மணந்தார்.

இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் அஸ்வினை விவாகரத்து செய்தார் சவுந்தர்யா. மகளின் இந்த முடிவு ரஜினிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதன் பிறகு அதிலிருந்து மீளவே அவருக்கு சில மாதங்கள் ஆகிவிட்டது. இதனையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார் சவுந்தர்யா.

இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது விவாகரத்து முடிவை திடீரென அறிவித்து திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி கொடுத்தார். மகளின் இந்த முடிவால் ரஜினி கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.

இச்சமயத்தில் தனது அக்காவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் சவுந்தர்யாவையும், ஐஸ்வர்யாவையும் ரஜினி தூக்கியபடி இருக்கிறார். என்ன நடந்தாலும் எங்களுக்கு எங்க அப்பா இருக்கார் என்பதை அந்த பதிவு மூலம் சூசகமாக சொல்லி உள்ளார் சவுந்தர்யா.

Related posts

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

இ.றுக்கமான உடை… ம.னைவியை கொன்ற க.ணவன் எழுதிய 11 பக்க கடிதம்!!

nathan

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan

கிரீம் மூலம் வேக்ஸ் செய்வதில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் கோல்டு வேக்ஸ்.

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

கோடை பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

nathan

நண்பர்களே! வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்

nathan