சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம். விட்டமின் டி எலும்பு வலிமைக்குதான் முதல் முன்னுரிமை.
அது கொஞ்சம் குறைந்தாலும் மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும். அதன் குறைபாடு அதிகரித்தால் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
விட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்:
உடல் சோர்வு, முதுகு மற்றும் இடுப்பு வலி, மூட்டு வலி, ஆறாத காயம், மன அழுத்தம் அதிகரித்தல், முடி உதிர்வு.
சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும்.
முட்டையில் புரோட்டீன் மட்டுமன்றி விட்டமின் டியும் நிறைவாக உள்ளது. அதன் மஞ்சள் கரு கால்சியம் மற்றும் பல வகை தாதுக்களையும் உள்ளடக்கியது, எனவே விட்டமின் டி குறைபாட்டை ஈடு செய்ய முட்டை சாப்பிடுவது நல்லது.
சிட்ரஸ் அதிகம் நிறைந்த திராட்சை பழம் எலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.
சால்மன் ரக மீன்களில் ஒமேகா 3 ரக பேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மேலும் இதில் விட்டமின் டி நிறைந்துள்ளது.
கீரையில் புரதச்சத்து இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே..ஆனால் அதில் விட்டமின் டி-யும் இருப்பது தெரியுமா..? மருத்துவர்களும் வாரம் ஒரு முறையேனும் கீரை சாப்பிடுங்கள் என சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.
பால் குடிப்பதால் எலும்பு வலுப்பெறும் என அனைவரும் அறிந்ததே. இதில் கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன.