25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 1523278978
மருத்துவ குறிப்பு

இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுத்துக்கிட்டா உயிரே போயிடும்…

இந்த கர்ப்ப கால அறிகுறிகளை எல்லாம் அலட்சியமாக விட்டு விடாதீர்கள்
கர்ப்ப காலம் என்றாலே தாயுக்கும் சேயுக்கும் சந்தோஷமான தருணங்கள் மட்டுமல்ல மிகவும் முக்கியமான காலமும் கூட. இந்த கர்ப்ப காலத்தில் கருவுற்ற பெண்ணின் ஒவ்வொரு உடல் செயல்களும் கருவில் வளரும் குழந்தைக்கு தகுந்த மாதிரி மாற்றம் பெறும்.

what are important signs in pregnancy
கால் வலி, பிடிப்பு, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி, மனநிலை மாறுதல், களைப்பு, சோர்வு, கை, பாதம், முழங்காலில் வீக்கம், மணிக்கட்டில் வலி, அடிவயிற்றில் வலி, முதுகுவலி போன்ற தற்காலிக கஷ்டங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் இந்த அறிகுறிளால் குழந்தைக்கும் தாயுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த பிறகு இதெல்லாம் காணாமல் போய்விடும்.

விழிப்புணர்வு

ஆனால் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீட்டில் இருப்பவர்கள் கூறிகிறார்கள் என்று நாமும் அதை அலட்சியமாக விட்டு விடுவோம். கருவுற்ற பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். ஒரு சில அபாய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆலோசித்து தெளிவு பெற்று கொள்ள வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சரி வாங்க! அந்த மாதிரியான அபாய அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இரத்தக் கசிவு

கர்ப்ப காலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவது ஒரு இயல்பான விஷயம் தான். ஆஸ்ட்ரேலியாவில் உள்ள ராயல் பெண்கள் மருத்துவனை கருத்துப்படி நான்கில் ஒரு பெண்கள் இந்த பிரச்சினையை சந்தித்தாலும் ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கின்றனர் என்று கருத்து தெரிவுக்கின்றனர்.

ஆரம்ப நாட்கள்

கருவுற்ற காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் இரத்தக் கசிவு பற்றி பயப்பட தேவையில்லை. இது கரு வளர்வதால் ஏற்படுகிறது. எனவே மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்பட்டால் போதும்

கருச்சிதைவு

கருவுற்ற 12 வாரத்திற்குள் யோனி வழி இரத்த போக்கோ, இரத்தம் கட்டி கட்டியாக, வலியுடன் வெளியேறினால் அது கருச்சிதைவாக இருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

எக்டோபிக் கருவுறுதல்

சில சமயங்களில் கருக்குழாயிலயே கரு வளர்ந்து விடும். இது எக்டோபிக் கருவுறுதல் என்று பெயர். இந்த மாதிரியான சமயங்களில் அதிக வலியுடன் இரத்த போக்கு ஏற்படும். இது குறித்து மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

நஞ்சுக்கொடி துண்டாதல்

கருவுற்ற காலத்தில் மூன்றாவது பகுதியில் இரத்தக் கசிவு ஏற்படுவது கருப்பையின் சுவரிலிருந்து நஞ்சுக்கொடி பிரிந்து விடுவதால் ஏற்படுகிறது. இது குழந்தைக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவை செல்லாமல் அபாயம் ஏற்படலாம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி கொள்வது நல்லது.

குமட்டல் மற்றும் வாந்தி

கருவுற்ற பெண்களில் 70-80% பெண்கள் கருவுற்ற காலத்தின் முதல் பகுதியில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர். இது சில மாதங்கள் கழித்து நின்று விடும். ஆனால் 0.3-2% பெண்கள் கருவுற்ற காலம் முழுவதும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் ஹைபர்மெஸிஸ் கிராவிடரம் என்ற பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர். இதனால் நீர்ச்சத்து பற்றாக்குறை, ஊட்டச்சத்து பற்றாக்குறை, நீர், எலக்ரோலைட், அமில கார சமநிலையின்மை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு எடை குறைந்த குழந்தை பிறப்பு ஏற்படுகிறது. போதுமான குழந்தை வளர்ச்சி இல்லாத நிலையை உண்டாக்குகிறது.

குழந்தை அசைவு குறைதல்

குழந்தை பிறக்கும் வரை தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை உயிருடன் இருக்கிறதா என்பதை சொல்லுவது அதன் அசைவு தான். 18-20 வாரத்திலேயே குழந்தை நன்றாக கை கால்களை உதைப்பது, சுத்துவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பித்து விடும். இதுவே குழந்தையின் நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது. ஆனால் இந்த குழந்தையின் அசைவு குறையும் போது இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 55% பெண்கள் இந்த மாதிரியான பிரச்சினையை சந்திக்கின்றனர் என்று நார்வே மற்றும் லண்டனின் தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனவே உங்கள் கருவுற்ற காலத்தில் குழந்தையின் அசைவை சரியாக கண்காணிப்பது மிகவும் முக்கியம். அதில் எதாவது மாற்றங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி கொள்வது நல்லது.

அதிக இரத்த அழுத்தம்

கருவுற்ற 20 வது வாரத்தில் சந்திக்கும் பிரச்சனை அதிக இரத்த அழுத்தம். இது ப்ரீ எக்லம்சியா என்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டால் கண் பார்வை மங்குதல், சிறுநீரில் புரோட்டீன் கலந்து செல்லுதல், கை கால் மற்றும் முகங்களில் அதிகப்படியான வீக்கம் போன்றவை தென்படும். இதனால் நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு போகும் இரத்த ஓட்டம் தடைபடலாம். இதனால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவை செயலிழக்க வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தீவிர அடிவயிற்றில் வலி

கருவுற்ற காலத்தில் அடிவயிற்றில் வலி என்பது சாதாரண ஒரு விஷயம். குழந்தையின் அசைவு, கருப்பை விரிவாக்கம் இதனால் ஏற்படும். ஆனால் கருவுற்ற காலத்தின் நடுப்பகுதியில் அதிக வயிற்று வலி, இரத்தக் கசிவு, காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது. இது நஞ்சுக்கொடி சிதைவு மற்றும் குறை பிரசவ மாகக் கூட இருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

யோனி திரவம்

50% பெண்கள் இந்த யோனி வழி திரவ பிரச்சினையை சந்திக்கின்றனர். கர்ப்பபை வாய் மற்றும் பார்த்தோலின் சுரப்பி, யோனி பகுதியின் தோலின் வெளியில் இருக்கும் செல்கள் மற்றும் பாக்டீரியாவின் செயல்பாடு காரணமாக இந்த மியூக்கஸ் திரவம் வெளிப்படுகிறது. இது ஒரு இயல்பான விஷயம் தான். ஆனால் சில சமயங்களில் இது நோய் தொற்றுகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.திரவம் கெட்ட துர்நாற்றம் வீசுதல், யோனி பகுதியில் அரிப்பு, டையூரியா போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்த நோய் தொற்று உடலுறவின் வழியாக தாய்க்கும் சேய்க்கும் பரவலாம். இதனால் எடை குறைந்த குழந்தை பிறப்பு, வளர்ச்சி அடையாத குழந்தை பிறப்பு, குரோயியோஅமினோட்டிஸ், போஸ்ட்பார்டம், எண்டோமெட்ரிட்ரஸ் மற்றும் போஸ்ட்சிசரியன் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. பாக்டீரியல் வெஜினோசிஸ்(பாக்டீரியா தொற்று) , ட்ரைகோமோனோஸிஸ்(T. வெஜினைல்ஸ் தொற்று) , கேண்டியாஸிஸ் (கேண்டிடா ஆல்பிகேன்ஸ்) போன்ற மூன்று விதமான தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

ப்ளூ அறிகுறிகள்

கருவுற்ற காலத்தில் நிறைய பெண்கள் ப்ளூ காய்ச்சலால் அவதியுறுகின்றனர். இது சில சமயங்களில் இறப்பு அல்லது குறை பிரசவத்திற்கு கூட வழிவகை செய்து விடும். எனவே இக்காலத்தில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி, தலைவலி, உடல் வலி, சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி கொள்வது நல்லது. நோய் கட்டுப்பாட்டு வாரியம் கருத்துப்படி இன்புலன்ஷா தொற்றிற்கு எதிராக கருவுற்ற பெண்கள் தற்காப்பு சிகச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். உடனே மருத்துவரை அணுகி ஆன்டி வைரல் மருந்துகளை எடுத்து கொள்வது உங்களுக்கும் குழந்தைக்கும் நன்மை அளிக்கும்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்ப கால நீரிழிவு நோய் உங்கள் கருவுற்ற காலத்தின் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் ஏற்படலாம். இருப்பினும் மூன்றாவது பகுதியில் உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, வாய் உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அலட்சியமாக விடாதீர்கள். இது கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு வழி வகுத்து விடும். அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகள், எதிர்காலத்தில் குழந்தைக்கு நீரழிவு நோய் ஏற்படுதல், பிறப்பிற்கு பிறகு அதிகமான குளுக்கோஸ் சுரப்பு, வலிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடலாம்.

செய்ய வேண்டியவை

கருவுற்ற கால அறிகுறிகளை விழிப்புணர்வுடன் கவனித்து உடனடியாக மருத்துவரை நாடிக் கொள்ள வேண்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் பெற்று கொள்ளுங்கள்

எதாவது உடலில் மாற்றம் அல்லது பாதிப்புகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று செயல்படுங்கள். உங்கள் உடம்பை பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நன்றாக சாப்பிட்டு நிம்மதியான ஓய்வு உறக்கம் வேண்டும்

செய்யக் கூடாதவை

விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே போதும். மன அழுத்தத்துடன் இருக்காதீர்கள். அது குழந்தையை பாதிக்கும். எனவே சந்தோஷமாக மன அழுத்தம் இல்லாமல் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக ஈன்றெடுங்கள்.

Related posts

பைல்ஸ் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு tamil ayurvedic

nathan

கண்ணை மூடுனதுமே தூங்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு தெரியுமா மாரடைப்பை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்..!

nathan

அன்று தங்கப் பல்…இன்று கோல்டு ஃபில்லிங்!

nathan

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

உங்களுக்கு தெரியுமா ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில பழங்கால வழிகள்!

nathan

உங்கள் துணைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

nathan

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

nathan

உடலில் உங்களுக்கு தெரியுமா இரத்தகட்டி இருப்பதை வெளிப்படுத்தும் 6 முக்கிய அறிகுறிகள்!

nathan