29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 61d8a2a094b
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

சாமை அரிசியில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாமை – 2 கப் (வறுத்தது)
பொட்டுக்கடலை – 2/3 கப் (வறுத்தது)
கடலை மாவு – 1 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
எள் – சிறிதளவு
எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு
வெண்ணெய் (காய்ச்சியது) – ¼ கப்

செய்முறை
பூண்டை அரைத்து கொள்ளவும்.

பொன்னிறமாக வறுத்த சாமை மற்றும் பொட்டுக்கடலையை நன்றாக அரைத்து சலித்தெடுத்து அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், அரைத்த பூண்டு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் அதில் காய்ச்சிய வெண்ணெயை ஊற்றி மாவை நன்கு கலந்து அத்துடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து சரியான பதத்திற்குப் பிசைந்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை முறுக்கு அச்சில் போட்டு ரிப்பன் பக்கோடாவாக பிழிந்து பொரித்தெடுக்க வேண்டும்.

 

கடைசி வரை அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். பொரித்த ரிப்பன் பக்கோடா சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம்.

பூண்டு சேர்ப்பது மணமாக இருப்பதோடு வாயுத் தொல்லை ஏற்படுவதையும் தடுக்கும். சூப்பரான சாமை ரிப்பன் பக்கோடா ரெடி.

Related posts

பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

கொத்து ரொட்டி

nathan

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan

சுவையான பாசிப்பயிறு குழிப்பணியாரம்

nathan

கரும்புச் சாறு கீர்

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

அச்சு முறுக்கு

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

மழைக்கேற்ற வாழைப்பூ வடை

nathan