23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 15 1
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிரைப் வாட்டருக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சா குழந்தைக்கு கொடுக்கவே மாட்டீங்க..

உங்கள் எல்லாருக்கும் பரிச்சயமான ஒரு விளம்பரம் தான் ” என்னாச்சு! குழந்தை ஏன் அழுது, நீ குழந்தையா இருக்கச் சநான் கிரைப் வாட்டர் தான் கொடுத்தேன்” என்ற விளம்பரத்தை நீங்கள் டிவியில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

gripe water uses
குழந்தை அழுதாலோ வயிற்றில் எதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ உடனே நாம் தேடுவது இந்த கிரைப் வாட்டரை தான். தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் இந்த பழக்கம் உண்மையில் நல்லதா? ஒவ்வொரு தாய்மார்களும் இதை பற்றி முழுவதுமாக அறிந்து செயல்படுவது தான் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதும் கூட.

கிரைப் வாட்டர்

கிரைப் வாட்டர் என்பது தண்ணீர் அமைப்பில் உள்ள ஒரு டானிக். இது குழந்தைகளின் சீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது. வயிற்று வலி, அஜீரணம், வாய்வு, விக்கல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது. 19 ஆம் நூற்றாண்டை சார்ந்த பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளரான வில்லியம் உட்வர்ட் தான் இதை முதன் முதலாக வணிக ரீதியாக தயாரித்து வெளியிட்டார். ஆனால் 1840 யிலேயே இங்கிலாந்து மருத்துவர்கள் இந்த மருந்தை மலேரியா நோய்க்கு பயன்படுத்தினர். அப்பொழுது தான் இந்த மருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிப்பதும் தெரிய வந்தது.பிறகு இதை அறிந்த உட்வர்ட்ஸ் மருந்தின் சூத்திரத்தை மாற்றி அதை வணிக ரீதியாக விற்க முற்பட்டார்.

சேர்க்கப்படும் பொருட்கள்

உண்மையான உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரில் தண்ணீர், வெந்தய எண்ணெய், சோடியம் பைகார்பனேட், சர்க்கரை மற்றும் 3.6% ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதால் இதற்கு “கிரைப் – சீரண” என்ற பெயரை வைத்தார் உட்வர்ட்ஸ்.

ஆனால் நவீன காலங்களில் மருத்துவர்கள், பெற்றோர்கள் இதில் சேர்க்கப்படும் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டது. சில பிராண்ட்கள் இதில் செயற்கை சர்க்கரைகளை சேர்க்கின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் நாட்டிற்கு நாடு உற்பத்தியாளர்களை பொருத்து வேறுபடுகிறது.

பாதுகாப்பானதா?

குழந்தை அழுதால் ஏதேனும் வயிற்றுக் குாளாறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் கிரைப் வாட்டர் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் அந்த கிரைப் வாட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி முடிவுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

ஆல்கஹால்

3.6 %ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு நல்லது அல்ல. இதில் சேர்க்கப்படும் ஆல்கஹால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மட்டுமல்லாமல் இளைய வயதினரை அடிமையாக்கவும் செய்து விடுகிறது. இது ஒரு தேவையில்லாத பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கலப்படம்

1993 ல் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரை வணிக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும் நவீன காலங்களில் அதில் பராபன்ஸ், வெஜிடபிள் கார்பன், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆல்கஹால், சோடியம் பைகார்பனேட், புதினா எண்ணெய், மெந்தால் ஆகியவற்றை சேர்க்கின்றனர். இவைகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது தான் நல்லது. இந்த மாதிரியான கலப்படம் இல்லாத பிராண்ட் கிரைப் வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை பொருத்து குழந்தைகளுக்கு உபயோகியுங்கள்.

சோடியம் பைகார்பனேட்

சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா) இவையும் சேர்க்கப்படுகிறது. இவை இந்தியாவில் சர்க்கைக்ஷாரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. உங்கள் குழந்தை அமிலத் தன்மை பிரச்சினைக்காக அழுதால் அதற்கு இது தீர்வளிக்கும். ஆனால் அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் மில்க் – ஆல்கலி என்ற நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது. இது என்னவென்றால் உங்கள் குழந்தைகள் குடிக்கும் பாலில் உள்ள கால்சியம் சத்து இந்த அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் காரத்தால் அவர்களின் இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கிறது. எனவே ஆறு மாத குழந்தைகள் எப்பொழுதும் தாய்ப்பால் குடிப்பதால் இதை நீண்ட நாட்கள் அவர்களுக்கு கொடுக்கும் போது நாளடைவில் சிறுநீரக பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது எனவே ஆறு மாத குழந்தைகளுக்கு, மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வெந்தய விதை எண்ணெய்

வெந்தய மற்றும் பெருஞ்சீரக விதை எண்ணெய் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்கள் குழந்தைகளின் சீரண சக்திக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிறு வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. சில இது குழந்தைகளுக்கு இது அலற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை

இதில் சேர்க்கப்படும் சர்க்கரை வயிறு வலியால் துடித்து அழகின்ற குழந்தையை முதலில் அமைதிப்படுத்த உதவுகிறது. ஆனால் அதிகப்படியான சர்க்கரை அவர்களுக்கு வயிற்று புழுக்கள், பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக கூட அமைகிறது. எனவே கிரைப் வாட்டர் கொடுப்பதற்கு முன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சர்க்கரையின் அளவை பார்த்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

விளைவுகள்

கிரைப் வாட்டர் வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதற்கு எந்த வித ஆராய்ச்சி சான்றுகளும் இல்லை. ஆனால் தற்காலிகமான மருந்தாக செயல்படுகிறது என்கின்றனர். இவற்றால் பெரும்பாலும் வயிற்று போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சில பிராண்ட் கிரைப் வாட்டரில் வயிற்று போக்கை ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளான க்ரிப்டோஸ்போரிடியம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் வயிற்று போக்கிற்கும் கிரைப் வாட்டர்க்கும் நேரடி தொடர்பு இல்லை. உற்பத்தியாளர்களை பொருத்தே இது ஏற்படுகிறது.

கிரைப் வாட்டரில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை, சோடியம் பைகார்பனேட், ஆல்கஹால் இவற்றால் மற்றுமே பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பொருட்கள் இல்லாத கிரைப் வாட்டர் பிராண்டை பயன்படுத்துங்கள்.

பயன்கள்

வயிற்று வலி

வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கப்பட்டு வருகிறது. வலியால் அல்லது பயத்தால் கதறும் குழந்தைக்கு தற்காலிகமாக நிவாரணம் தர கொடுக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்வு தொல்லையை நீக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

பல் முளைத்தல்

பல் முளைக்கும் போது அந்த வலியால் சில குழந்தைகள் தொடர்ந்து அழுவார்கள். இதனால் அதிகப்படியான வாய்வு உள்ளே நுழைந்து வயிறு பிரச்சினையை ஏற்படுத்தி விடும். இதற்கும் கிரைப் வாட்டர் பயன்படுகிறது.

விக்கல்

அமிலத்தன்மை, வாய்வு போன்ற பிரச்சினைகள் விக்கல் பிரச்சினையும் ஏற்படுத்தி விடும். எனவே குழந்தைகளுக்கு விக்கல் அதிகமாக இருக்கும் போது இந்த கிரைப் வாட்டரை பயன்படுத்துகின்றனர்.

பிறந்த குழந்தை

இதன் உற்பத்தியாளர்கள் பிறந்து இரண்டு வாரம் ஆன குழந்தைக்கு மட்டுமே கிரைப் வாட்டரை பரிந்துரைக்கின்றனர் . ஆனால் பிறந்த குழந்தைக்கு கொடுப்பதற்கு முன் குழந்தைகள் நல மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது. இருப்பினும் தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு சிறந்தது என்பதை மறவாதீர்கள்.

பயன்படுத்தும் முறை

கிரைப் வாட்டர் லேபிளிலில் குறிப்பிடப்பட்டுள்ள சரியான அளவை டீஸ்பூன் கொண்டோ அல்லது பில்லர்களை பயன்படுத்தியோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த அளவானது குழத்தைகளின் வயது மற்றும் பிரச்சினைகளின் தீவிரத்தை பொருத்து மாறுபடும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் படி கொடுப்பதும் நல்லது. கவனமாக லேபிளிலில் கொடுக்கப்பட்டுள்ள காலாவதி தேதி, குறிப்புகள் இவற்றை படித்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

உங்கள் குழந்தைகளுக்கு வாய்வு, அமிலத் தன்மை மற்றும் சீரண பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் தென்படும் போது இதை கொடுப்பது நல்லது. வெறும் வயிற்றில் இதை கொடுக்காதீர்கள். காரணம் இதிலுள்ள சோடியம் பைகார்பனேட் வயிற்றில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து கொடுப்பதும் தவறு. இவை தாய்ப்பாலுடன் வேதி வினைபுரிந்து பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.

மசாஜ்

குழந்தைகளுக்கு வாய்வு, அமிலத் தன்மை பிரச்சினைகள் ஏற்படும் போது கொஞ்சம் வயிற்றை மசாஜ் செய்து விடுங்கள். இவை தசைகளை ரிலாக்ஸ் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

ஃபார்முலா மில்க்

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர லாக்டோஜென், பால் பவுடர் போன்ற ஃபார்முலா மில்க் முறைகளை பின்பற்றினால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பிராண்ட்டை மாற்றி உபயோகித்து பாருங்கள். சில சமயம் பால் குடித்த குழந்தைகள் வாயுவால் எதுக்களிக்கும். அந்த மாதிரியான சமயத்தில் தோலில் போட்டு முதுகை தடவி விடுங்கள். இது வயிற்றில் உள்ள வாய்வு வெளியேற உதவியாக இருக்கும்.

வெது வெதுவெதுப்பாக

குழந்தைகள் வயிறு வலியால் அழும் போது ஒரு போர்வையை கொண்டு சுற்றி அவர்களுக்கு கதகதப்பான சூழ்நிலையை உருவாக்குங்கள். இது அவர்களுக்கு இதத்தை தரும். அப்படி இல்லையென்றால் உங்கள் கைகளில் வைத்து மார்போடு அணைத்து வைத்து கொள்ளுங்கள் இதுவும் நல்ல பலனை தரும்.

தாய்ப்பால்

ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது நல்லது. இவை அவர்களின் சீரண மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைய உதவும். எனவே இந்த மாதிரியான பிரச்சினை சமயத்தில் ஃபார்முலா மில்க்கிற்கு பதிலாக தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். ஆறு மாதக் குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுத்தால் குடலில் பாக்டீரியாக்கள் பெரு வாய்ப்புள்ளது. எனவே அதை தவிருங்கள்.

தயாரித்தல்

கடைகளில் விற்கப்படும் கிரைப் வாட்டருக்கு பதிலாக அதில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு நீங்களே வீட்டில் கிரைப் வாட்டர் தயாரித்து அவ்வப்போது கொடுங்கள். இது மற்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றும். எனவே இனி கிரைப் வாட்டர் பயன்படுத்தும் முன் அதில் சேர்க்கப்படும் பொருட்களை அறிந்து கொண்டு மேலும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்னர் பயன்படுத்துவது சிறந்தது.

Related posts

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…உறங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவேண்டுமாம்!

nathan

கர்ப்பம் அடைவதற்கு தடையாக பெண்கள் நம்பும் மூடநம்பிக்கைகள்

nathan

அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

nathan

வாய் நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்

nathan

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan