28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld2367
ஃபேஷன்

புதிய ஆண்டுக்கு ஏற்ப புதுசா சொல்றோம்!

ஜுவல்ஸ்

வருடம் தவறாமல் மாறுகிற ஃபேஷனில் நகைகளுக்கு முக்கிய இடமுண்டு. ஒன்று ஏற்கனவே உள்ள நகைகளை ஓரங்கட்ட வேண்டும் அல்லது உங்கள் கற்பனைக்கு வேலை கொடுத்து, பழையதை, புதியதாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். வரப்போகிற புது வருடத்தில் என்ன மாதிரியான நகைகள் பிரபலமாகப் போகின்றன பழசையும் புதுசையும் இணைக்கிற ஃபியூஷன் ஃபேஷன் டிப்ஸ்… அவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது, எந்த உடைக்கு எது பொருந்தும் என சகலத்தையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் நகை வடிவமைப்பாளர் ராஜி ராம்.

தெரிந்தோ, தெரியாமலோ… இன்றைய இளம் பெண்களின் விருப்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘இகோ ஃப்ரெண்ட்லி’ உடைகள் மற்றும் நகைகள் பக்கம் திரும்பியிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் சூடுபிடிக்கப் போகிறவை சணல் மற்றும் வுட்டன் உபயோகங்கள். லைட் வெயிட் மரத்தினால் செய்யப்பட்ட மணிகள் கோர்த்த மாலைகளுக்கும், காதணிகளுக்கும்தான் அமோக வரவேற்பு. இடுப்புக்குக் கட்டிய அரைஞாண் கயிறுதான் இப்போது கழுத்துக்கான ஹாட் ஃபேஷன்.

கருப்புக் கயிற்றில் கோர்த்த மெகா சைஸ் வுட்டன் பென்டென்ட், அதற்கு மேட்ச்சான காதணிகள், மாடர்ன் உடைகள் எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகும். சோக்கர் செட்டிலும் வுட்டன் ஃபினிஷ் வந்திருக்கிறது லேட்டஸ்ட்டாக. பெரிய, அகலமான கழுத்து வைத்த உடைகளுக்குப் பொருத்தம் இவை.ஸ்கர்ட் அணிகிற கலாசாரம் மறுபடி பிரபலமாகி வருகிறது. தழையத் தழைய ஸ்கர்ட் அண்ட் டாப்ஸ் அணிந்து, அதற்குப் பொருத்தமாக நீளமான, இரட்டைவட கிரிஸ்டல் மாலைகள் அணிவதும் லேட்டஸ்ட்.

கழுத்துடன் ஒட்டியபடி கலர், கலராக கிரிஸ்டல் மாலைகள் அணிவது பல வருடங்களுக்கு முன்பு ஃபேஷனாக இருந்தது. பிறகு அதிலேயே தங்க மணிகள் கோர்த்து அணிய ஆரம்பித்தார்கள் நடுத்தர வயதுப் பெண்கள். இன்று கிரிஸ்டல் மணிகள் மீண்டும் இளம் பெண்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. கிரிஸ்டல் பாதி, மெட்டல் பாதியாகக் கோர்த்த நீ…ளமான சங்கிலிகள் கலர் கலராக கிடைக்கின்றன. டி ஷர்ட் அணிகிற பெண்கள், பெரும்பாலும் கழுத்துக்கு எதையும் அணிவதை விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக நீளமாக தொங்கும் மெகா சைஸ் காதணிகளை மட்டும் அணிந்து கொள்கிறார்கள்.

வுட்டன் நகைகளுக்கு அடுத்தபடியாக சணல் நகைகளுக்கே இளம் பெண்களின் ஓட்டு. ‘சணலா..?’ என முகம் சுளிக்க வேண்டாம். நீங்களாகச் சொன்னால் தவிர அது சணலில் செய்யப்பட்டது என்றே தெரியாது. சணலில் காதணி, கழுத்தணி மட்டுமின்றி, கால்களுக்கு செருப்பும், ஹேண்ட் பேக்கும் மேட்ச்சிங்காக கிடைப்பது அவர்கள் அதை விரும்ப இன்னொரு காரணம். காட்டன் குர்தி, சல்வார், ஜீன்ஸ், காட்டன் சேலை என சிம்பிளான உடைகள் எல்லாவற்றுக்கும் அட்டகாசமாகப் பொருந்தும் இந்த ஜூட் ஜுவல்லரி.

பெரிய பெரிய கண்ணாடி மணிகள் கோர்த்த கலர்ஃபுல் மாலைகளும் அடுத்த வருடத்தின் ஃபேஷன் பட்டியலில் இருக்கின்றன. ஒரே கலர் மணிகள் என்றால் பாரம்பரிய உடைகளுக்கும், கன்னாபின்னா கலர்கள் என்றால் மாடர்ன் உடைகளுக்கும் மாற்றி மாற்றி அணியலாம். ஸ்பைரல் வடிவ காதணிகளுக்கு லேட்டஸ்ட்டாக ஏகத்துக்கும் மவுசு. சின்னது, பெரியது, கோல்டன் ஃபினிஷ், சில்வர் ஃபினிஷ், ஆக்சிடைஸ்டு எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. மாடர்ன் உடைகளுக்கு சரியான மேட்ச்.

இவை தவிர, ஒரு காலில் கொலுசு அணிவது, இன்னொரு காலின் கொலுசில் வித்தியாசமான ஏதேனும் ஒரு பென்டென்ட் மாட்டி, கழுத்துக்கு அணிவது, பெரிய மெட்டல் வளையல்களையோ, கலர் கலரான பிளாஸ்டிக் வளையல்களையோ ஒன்றாகச் சேர்த்து, ஒரு கருப்புக் கயிற்றில் கோர்த்து கழுத்துக்கு அணிவது, விரலையே மறைக்கிற அளவுக்கு பெரிய மோதிரம் அணிவது, டிரான்ஸ்பரன்ட் கயிற்றில் கோர்த்த கழுத்தணி போன்றவையும் அடுத்தடுத்து ஃபேஷனாக போகின்றன.

ஃபேஷன் நகைகளைத் தேர்ந்தெடுக்கும் போது…

குறிப்பிட்ட ஒரு உடைக்கு மட்டும் மேட்ச்சாகிற மாதிரி இல்லாமல், கலர் ஃபுல்லாக தேர்ந்தெடுக்கவும். உடைகளின் நிறங்கள் அடிக்கடி மாறும். நான்கைந்து உடைகளுக்குப் பொருந்திப் போகிற மாதிரியான கலர்ஃபுல் நகைகளே எப்போதும் சிறப்பு.

கருப்பு ஜீன்ஸ், க்ரே டி ஷர்ட், பீஜ் டாப்ஸ் போன்றவற்றுக்கு டிரான்ஸ்பரன்ட் ஜெம் ஸ்டோன் நகைகள் அழகாகப் பொருந்தும். நீலம், ஊதா, பிங்க் நிறங்களும் எடுப்பாக இருக்கும்.

குறிப்பிட்ட ஒரு நகை ஃபேஷனில் இருக்கிறது என்பதற்காக நீங்களும் அதைத் தேர்ந்தெடுக்க நினைக்காமல், உங்கள் தோற்றத்துக்குப் பொருத்தமாக இருக்குமா எனப் பார்த்து வாங்குங்கள். உங்களுக்கென ஒரு ஸ்டைலை கூடப் பின்பற்றலாம். உதாரணத்துக்கு நீங்கள் முத்து நகைகளை அணிபவர் என்றால், அதில் லேட்டஸ்ட்டான ஃபேஷன் என்ன என்பதைப் பின்பற்றி, அதற்கேற்ப அணியலாம்.

ஒரே மாதிரி நகைகளை அணிந்து போரடிக்கிறதா? கொஞ்சம் பின்னோக்கிப் போய், பிளாக் அண்ட் ஒயிட் காலத்தைய பழைய நகைகளை அணிந்து பாருங்கள். ஆன்ட்டிக் நகைகளில் வலம் வாருங்கள். ஃபேஷன் என்பது நீங்கள் உருவாக்கு வதுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

ld2367

Related posts

பண்டிகைகள் மற்றும் விழாக்களில் ஆண்களுக்கான அழகிய ஆடை எது தெரியுமா?..

sangika

இந்தியாவின் ஃபேஷன் ராணி!

nathan

சூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்

nathan

அகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க!….

sangika

henna pregnancy belly

nathan

புதிய டிசைனர் குர்தி மாடல் சுடிதார்…

nathan

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

sangika

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

பழைய புடவைகளை மாற்றி புதிதாக அழகாக பயன்படுத்தலாம்

nathan