25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
4 Simple Cures For Post Menopausal Weight Gain
தொப்பை குறைய

தினமும் இந்த 4 உணவுடன், 2 உடற்பயிற்சியை மேற்கொண்டால்.. ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்கலாம்!

எத்தனையோ மக்கள் உடல் எடையைக் குறைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதோடு அதற்கான சரியான வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பலரும் தினமும் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், டயட் இல்லாமல் சரிவிகித உணவை உட்கொண்டு, தொப்பை மற்றும் எடையைக் குறைக்கும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பதற்கான எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 4 உணவுப் பொருளையும், 2 உடற்பயிற்சியையும் ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

கறிவேப்பிலை
தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இதனால் தொப்பை குறைவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் சீராகும். ஏனெனில் கறிவேப்பிலையில் உள்ள கொழுப்புச் செல்களை கரைத்து வெளியேற்றும் பொருள் உள்ளது.

க்ரீன் டீ
காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், தொப்பையை நிச்சயம் குறைக்கலாம். மேலும் ஆய்வுகளும் க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால் தொப்பை குறையும் என்று சொல்கிறது. இதற்கு அதில் உள்ள EGCG என்னும் பொருள் தான் காரணம்.

சோம்பு தண்ணீர்
சோம்பு கூட உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும். அதற்கு சோம்பை லேசாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் தினமும் உணவு உண்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு பொடியை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் தொப்பை குறைவது மட்டுமின்றி, வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.

தேன் மற்றும் பட்டை
ஒரு கப் சுடுநீரில் 1 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு பாதியும், மீதியை இரவில் படுக்கும் முன்பும் குடித்து வர வேண்டும். இப்படி செய்வதால் தொப்பை சீக்கிரம் குறையும்.

ப்ளான்க் பயிற்சி
தினமும் ப்ளான்க் என்னும் உடற்பயிற்சியை காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்து வர வேண்டும். அதற்கு தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, படத்தில் காட்டியவாறான நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி 3-4 செட் செய்து வந்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறையும்.

பர்ப்பீஸ்
உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் உடற்பயிற்சிகளில் மிகவும் சிறப்பான ஒன்று தான் பர்ப்பீஸ். இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம், கலோரிகள் எரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 10 வேகமான பர்ப்பீஸ் பயிற்சியானது 30 நிமிடம் ஸ்பிரிண்ட் ஓட்டம் மேற்கொண்டதற்கு சமம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த அளவில் இந்த பர்ப்பீஸ் பயிற்சியானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். படத்தில் காட்டியவாறு பர்ப்பீஸ் பயிற்சியை தினமும் 10 முறை வேகமாக செய்து வர, விரைவில் தொப்பையைக் குறைக்கலாம்.4 Simple Cures For Post Menopausal Weight Gain

Related posts

தொப்பையை வேகமாக கரைக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க…

nathan

தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு!

nathan

தொப்பை குறைய வயிற்று பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யலாமா?

nathan

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்!

nathan

விரைவில் தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா?

nathan

உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொள்ள…

sangika

தொப்பை அதிகரிக்க போகின்றது முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்!!

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan